இல்லாளின் ஒரு வாரப் பிரிவும் இல்லாமலிருத்தலும்
நீ
தளும்ப தளும்ப தரும்
காபி குவளைகள்
காலியாகவிருக்கின்றன
தளும்புகின்றன...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நடுநிசி வந்து
பூட்டிய கதவு திறந்து
அசந்து படுத்தாலும்
என்னோடு சேர்ந்து
உறங்க மறுத்து
உன் ஞாபக அலையடிக்கிறது
மாத காலண்டர்...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நீ
திட்டித்திட்டி செய்யாததையெல்லாம்
அனிச்சையாய் செய்கிறேன்...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வேண்டுமட்டும் தூங்கலாம்
ஆப்பாயில் சாப்பிடலாம்
10 மணி தாண்டி வீடு வரலாம்
இந்த எந்த சுதந்திரமும் வேண்டாம்
விரைந்து வா....
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
குடிக்க சுடுதண்ணீர் போடுகையிலும்
உள்ளாடை துவைக்கையிலும்
தெரிந்து போகிறது...
என்னை எந்தளவு
கெடுத்து வைத்திருக்கிறாயென்று...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நீ
திரும்பிவரும் நாள்வரை
மொத்தமாய் கிழித்தபின்
காலண்டரும் எனைப்பார்த்து
கைகொட்டி நகைக்கிறது
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
//நீ
ReplyDeleteதிட்டித்திட்டி செய்யாததையெல்லாம்
அனிச்சையாய் செய்கிறேன்...//
எல்லாரும் ஒரே மாதிரிதானா?
//வேண்டுமட்டும் தூங்கலாம்
ஆப்பாயில் சாப்பிடலாம்
10 மணி தாண்டி வீடு வரலாம்
இந்த எந்த சுதந்திரமும் வேண்டாம்
விரைந்து வா....//
lines i like most.
RVC அவர்களுக்கு...
ReplyDeleteநன்றிகள் பல.
ப்ரிய நித்யன்.
நீ
ReplyDeleteதிட்டித்திட்டி செய்யாததையெல்லாம்
அனிச்சையாய் செய்கிறேன்...//
கொய்யலா உங்கல எல்லாம் கொஞ்சநாள் அலையவச்சதாள் பொண்டாட்டியோட அருமை தெரியும்.
கவிதை எல்லாம் நல்லாதான் இருக்கு
"இந்த எந்த சுதந்திரமும் வேண்டாம்
ReplyDeleteவிரைந்து வா...." ...
"என்னை எந்தளவு
கெடுத்து வைத்திருக்கிறாயென்று..."
நிஜமான வார்த்தைகள்.
அழகாக வடித்திருக்கிறீர்கள்.
///
ReplyDeletejackiesekar said...
நீ
திட்டித்திட்டி செய்யாததையெல்லாம்
அனிச்சையாய் செய்கிறேன்...//
கொய்யலா உங்கல எல்லாம் கொஞ்சநாள் அலையவச்சதாள் பொண்டாட்டியோட அருமை தெரியும்.
///
உங்க நல்ல மனசுக்கு மிக்க நன்றி. நமக்கும் ஒரு காலம் வரும்.
அப்ப வச்சுக்கிறேன்.
நித்யன்
///
ReplyDeleteடொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
"இந்த எந்த சுதந்திரமும் வேண்டாம்
விரைந்து வா...." ...
"என்னை எந்தளவு
கெடுத்து வைத்திருக்கிறாயென்று..."
நிஜமான வார்த்தைகள்.
அழகாக வடித்திருக்கிறீர்கள்.
///
மிக்க நன்றி டாக்டர்.
அன்பு நித்யன்
ஹஹாஹா ....ஒரு வாரத்துக்குள் இவ்வ்ளோ மாற்றமா???? திருந்தீட்டீங்கப்பா!!!! :)
ReplyDeleteஅன்புடன் அருணா
//நீ
ReplyDeleteதிட்டித்திட்டி செய்யாததையெல்லாம்
அனிச்சையாய் செய்கிறேன்...//
//இந்த எந்த சுதந்திரமும் வேண்டாம்
விரைந்து வா....//
//உள்ளாடை துவைக்கையிலும்
தெரிந்து போகிறது...//
அருமை.
nidhiya
ReplyDeleteஇந்த எந்த சுதந்திரமும் வேண்டாம்
விரைந்து வா...."
yes nidhya it is ture..
must every one must have expeienced..
irukumpothu einthu viluvathum, illathapothu yeanguvathum vazhvin nijam
arun
Arumai....Veranna Solla :)
ReplyDeleteAnbu
அருமையான் வரிகள்.
ReplyDeleteதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி
மனைவியின் மீதுள்ள பிரியம் மிக அழகாக வெளிப்பட்டுள்ளது.. நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteyeppaa !!! I read ur poem at Ahemadabad railway station..waiting for Abu road train at 11.15Pm...I am on duty ..
ReplyDeleteU increased my feelings further..
everyday in my dreams I see you...I feel you........................
நண்பர் ராமானுசம்..
ReplyDeleteஉங்களின் இந்த வரிகள்தான் எனக்கு கிடைத்த நல்ல பாராட்டாகக் கருதுகிறேன். நமக்கும் இது நேர்ந்ததே என்ற சிந்தையை தோற்றுவிக்கும் வரிகளே கடந்தும் பேசப்படும்.
நன்றி
அன்பு நித்யன்
பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா..no enjoy.....
ReplyDeleteநல்லாருக்கு நித்யகுமாரன்..
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்து வாழ்த்திய பாச மலருக்கு நன்றிகள்
ReplyDeleteஅன்பு நித்யன்
நித்யகுமாரன்,
ReplyDeleteஉங்களுடைய இந்தக்கவிதை என் பழையக் கவிதை ஒன்றை நினைவூட்டி.... என் சோம்பலை களையவைத்து பதிவிடச்செய்தது. நன்றி.
நண்பர் இப்னு ஹம்துன்...
ReplyDeleteநன்றி
அன்பு நித்யன்