அவர்களுடைய ஸ்டார் குரூப்பில் மிகப் பெரும் வெற்றியடைந்த “The great laughter challenge" நிகழ்ச்சியை தமிழில் “கலக்கப்போவது யாரு?” என கொண்டுவந்தார்கள் விஜய் டிவியினர். ஹிந்தியில் நவ்ஜோத் சித்துவும் மற்றொரு காமெடி நடிகரும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால், இங்கே தமிழில் நம்ம ரமேஷ் மற்றும் ஒரு காமெடி நடிகரும் (யாரென்று நினைவில்லை, தெரிந்தால் சொல்லுங்களேன்) தொகுத்து வழங்கினர். விஜய் டிவி நிர்வாகத்திற்கும் அந்த நிகழ்ச்சியின் இயக்குநருக்கும் ஏதோ பிரச்சனை வந்தபின், சன் தொழிலாளர்களை கலைஞர் தொலைக்காட்சி வளைத்தது போல, சன் டிவி அந்த டீமையே வளைத்துப்போட்டு “அசத்தப்போவது யாரு?” என்று அளப்பரையை ஆரம்பித்தது. அரசியல் பின்னணியிலிருந்து வந்தவர்களுக்கு சொல்லித்தரவா வேண்டும்.
பிற்பாடு இதே நிகழ்ச்சியின் பல பிரதிகள் நாம் திருப்பும் டிவி தோறும் வந்து கொண்டேயிருக்கின்றன. பிற்பாடு விஜய் டிவி நிகழ்ச்சியில் அப்போது அதிமுகவில் இருந்த S V சேகர் கலந்து கொண்டு வாராவாரம் சன் டிவியை கலாய்த்துக் கொண்டேயிருந்தார். இப்போது S V சேகர் எந்த கட்சியில் இருக்கிறார் என்று அவருக்கே சந்தேகம் வருகிறதாம். ஏதோ போகிற போக்கில் இதை நான் சொல்லவில்லை. உலகத் திரைப்பட விழாவில் நடந்த ஒரு press meet ல் அவரே சொன்ன வாசகம்தான் இது.
இதே போலத்தான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியும்... முதன்முதலில் விஜய் டிவியில் வந்தபோது (அதாவது சீசன் 1 என்று வைத்துக்கொள்ளுங்கள்) அந்த நிகழ்ச்சி மிகப் பெரும் கவனிப்பை ஏற்படுத்தியது என்பது உண்மை. இதைக்கண்ட சன் அந்த நிகழ்ச்சியின் மற்றொரு பிரதியையும் ஏற்படுத்தியது. பிற்பாடு வந்த கலைஞர் தொலைக்காட்சி டான்ஸ் மாஸ்டர் கலாவையே அமுக்கி “மானாட மயிலாட”ச் செய்தது. இப்போது இந்த ரெகார்ட் டான்ஸ் நிகழ்ச்சிகளை எந்த சானலில் காட்டினாலும் சகிக்கவேயில்லை.
முன்பு சன்டிவியில் சமக தலைவர் சரத்குமாரு நடத்திய “கோடீஸ்வரனை” நக்கலடித்து, ஜெயா டிவியில் வந்தது “பிச்சாதிபதி”. அதன் பிறகு ஜெயா தொலைக்காட்சி இந்த போட்டிகளிலெல்லாம் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை எனலாம். குஷ்பு வின் “ஜாக்பாட்” நிகழ்ச்சியே போதுமென்றிருக்கிறார்களோ என்னவோ...! அந்த நிகழ்ச்சிக்காக வாராவாரம் புதுப்புது ஜாக்கெட் களுடன் குஷ்பு வருவதாகக் கேள்வி.
தற்போது விஜய் டிவியில் வரும் உருப்படியான சில நிகழ்ச்சிகளுக்கு மற்ற சேனல்களிடமிருந்து போட்டியே கிடையாது. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் : “நடந்தது என்ன?”, “நீயா நானா”, “இப்படிக்கு ரோஸ்”, “காபி வித் அனு”, “ கணா காணும் காலங்கள்”, “லொள்ளுசபா” இப்படி நீள்கின்றன....
அதுவும் லொள்ளுசபாவின் “பேக்கரி” (போக்கிரியின் காமெடி வெர்ஷன்), இன்றும் என்னுடைய பேவரிட். சந்தானத்திற்குப் பிறகு ஜீவா அழகாக அந்த இடத்தை நிரப்பினார் எனலாம். ஆனால் இப்போது அப்படி ஒரு ஆள் கிடைக்காமல் அந்த நிகழ்ச்சி தடுமாறினாலும், அதன் பலமான script இன்றும் பட்டையக் கிளப்பும் மொக்கைக் காமெடிகளைக் கொண்டு கலக்கி வருகிறது.
“காபி வித் அனு”, “இப்படிக்கு ரோஸ்” போன்ற வித்தியாசமான சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று ஒன்றுபடாமல் தனித்தன்மையுடன் விளங்குவது மிகச்சிறப்பு. இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியில் காம்பியரர் ஒரு திருநங்கை (இந்த வார்த்தை வலை இயங்குதளத்தில் பரவலாக வரக் காரணமானவர் லிவிங் ஸ்மைல் வித்யா தான்...), என்பது மட்டும் வித்தியாசமல்ல. அவர்கள் கையாளும் பிரச்சனைகளும் அப்படித்தான். ஒரு திருநங்கையுடன் மக்கள் சாதாரணமாக பேசுவதே வித்தியாசமாக சிந்திக்கப்பட்ட சமுதாயத்தில், மக்கள் தங்கள் அந்தரங்க பிரச்சனைகளை சொல்லி அழும் ஒரு புகலிடமாக மாற்றியது மிகப் பெரிய விஷயம். இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை சத்தமில்லாமல் செய்த அந்த நிகழ்ச்சி பாராட்டத்தக்கது.
“காபி வித் அனு” ஒரு கொண்டாட்டம் என்று சொல்லலாம். அனுஹாசனின் நேர்மையான அணுகுமுறையும், இயல்பான பேச்சும், அழகு சிரிப்பும் (கல்யாணமாகாத பொண்ணப் பத்தி இப்படி பேசலாமா?), பேட்டியை எடுத்துச்செல்லும் பாங்கும் அசாத்தியமானது. இந்த பாணியில் சன்டிவியில் கௌதமி ஆரம்பித்த ஒரு நிகழ்ச்சி சுவடு தெரியாமல் காணாமல் போனதாக ஞாபகம். கௌதமியின் நிகழ்ச்சியில் முதல் guest ஆக வந்தவர் கமல்ஹாசன். அந்த நிகழ்ச்சியும் அந்த backdrop ம் இன்னும் ஞாபக அடுக்குகளில் இருக்கிறது.
“நடந்தது என்ன?” மற்றும் “நீயா? நானா?” போன்ற நிகழ்ச்சிகளின் வழியே ஒரு தொலைத்தொடர்பு சாதனம் தான் செய்யவேண்டிய பணியை சிறப்பாக செய்கிறது எனலாம். Infotainment என்ற பதத்திற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சிகளை நான் சொல்வேன். இந்த நிகழ்ச்சிகளின் காம்பியரர் கோபிநாத் அவர்களின் குரல் வளமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் மிக்க அழகு. நிகழ்வை நடத்திச் செல்லும் அவருடைய ஆளுமைத்தன்மையும், மிகவும் சீரிய editing ம் இந்த நிகழ்ச்சிகளின் தரத்தை பன்மடங்கு உயர்த்திக் காண்பிக்கின்றன.
அதிகாரத்தையும், பண பலத்தையும் கொண்டு சினிமாக்களை வாங்கிக் குவிக்கும் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள், அதே பலங்களைக் கொண்டு மிகவும் தரமான நிகழ்ச்சிகளையும் வழங்கலாமே...! ஊதுற சங்கை ஊதி வைப்பதில் எனக்கு எப்போதுமே பிரியம் உண்டு.
விஜய் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நணபரே ,,,,அன்புடன் கிருக்குபையன் .
ReplyDeleteஅன்பு நண்பருக்கு நன்றிகள் பல
ReplyDeleteப்ரியமுடன் நித்யன்
கல்யாணமாகாத பொண்ணா? யாரு? பதிவு நன்றாக இருக்கிறது. ஆனால், விஜய் டி.வி. தொடர்ந்து கல்ட் களை உருவாக்குவதுதான் கவலையளிக்கிறது.
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteஎன் மனதில் நெடுநாளாக இருந்த மனக்கசப்பை அழகாக அலசிருக்கிறீரிகள் நண்பரே, இதற்கு அந்த குடும்ப தொலைக்காட்சிகள் என்ன பதில் சொல்லப்போகிறது...... வழ்த்துக்கள்
ReplyDeleteஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉன்னு பலமா சங்கு ஊத என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteரொம்ப நாட்களுக்கு பிறகு மிகப்பெரியபதிவு திரும்பவும்,எழுது கோலை எடுத்து எழுதியமைக்கு நன்றி
ReplyDeleteநல்லவற்றை பின் பற்றுவது என்பது பிஸின்சுக்கு அழகு என்றாலும் ஈ அடிச்சான் காப்பி கொஞ்சம் அழுகுனி ஆட்டம்தான்
ReplyDeleteவிஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்திகளும் சிறப்பாகத்தான் இருந்தது. சட்டத்தை காரணம் காட்டி அது முடக்கப்பட்டது. அதில் செய்தி வாசித்த கோபிநாத் தவிர அனைவரையும் சன் செய்தி இழுத்துக் கொண்டது.
ReplyDeleteபிறரை முடக்கி, பிறரின் சிந்தனைகளை திருடி அல்லது படியெடுத்து வெற்றிபெற நினைப்பது திறமை அல்ல. அது பச்சை அயோக்கியத்தனம்.
(கல்யாணமாகாத பொண்ணப் பத்தி இப்படி பேசலாமா?),
ReplyDeleteஅந்த அம்மாவுக்கு கல்யாணம் ஆகலனு யாருங்க சொன்னது she is seperated
அந்த அம்மாவுக்கு கல்யாணம் ஆகலனு யாருங்க சொன்னது she is seperated
ReplyDeleteஎன்னதான் சொல்லவரீங்க???!!
ReplyDelete// ரமேஷ் வைத்யா said...
ReplyDeleteகல்யாணமாகாத பொண்ணா? யாரு? பதிவு நன்றாக இருக்கிறது. ஆனால், விஜய் டி.வி. தொடர்ந்து கல்ட் களை உருவாக்குவதுதான் கவலையளிக்கிறது.//
அனுஹாசன் பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை என எண்ணுகிறேன்.
எந்தவிதமான கல்ட் என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்ள ஏதுவாகயிருக்கும் நண்பரே...
உங்கள் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி
நித்யன்
// சரவணகுமரன் said...
ReplyDeleteநல்ல பதிவு//
மிக்க நன்றி நண்பரே...
// அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteஎன் மனதில் நெடுநாளாக இருந்த மனக்கசப்பை அழகாக அலசிருக்கிறீரிகள் நண்பரே, இதற்கு அந்த குடும்ப தொலைக்காட்சிகள் என்ன பதில் சொல்லப்போகிறது...... வழ்த்துக்கள் //
இது பெரும்பாலானோரின் கருத்துதான் நண்பரே...
குடும்ப தொலைக்காட்சிகளிடமிருந்து பதிலெல்லாம் வரவே வராது. அந்த தொலைக்காட்சிகளுக்கு கட்சி அடிப்படையில் தார்மீக ஆதரவு தரும் வலைஞர்களும் அச்சுப்பிச்சுத்தனமாக ஏதேனும் சமாதானம் சொல்லலாம். அவ்வளவுதான்.
// jackiesekar said...
ReplyDeleteஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉன்னு பலமா சங்கு ஊத என் வாழ்த்துக்கள்.//
நன்றி சாமியோவ்
//ரொம்ப நாட்களுக்கு பிறகு மிகப்பெரியபதிவு திரும்பவும்,எழுது கோலை எடுத்து எழுதியமைக்கு நன்றி//
இதைப்போய் மிகப்பெரிய பதிவு என்றால், அப்பன் முருகனின் பெயரால் உங்களுக்கு தெய்வக்குத்தம் வர வாய்ப்பிருக்கிறது. எங்க பெரிய அண்ணாத்தய நீங்கள் மறந்து பேசுவது மனதுக்கு வலியை ஏற்படுத்துகிறது. -)
//நல்லவற்றை பின் பற்றுவது என்பது பிஸின்சுக்கு அழகு என்றாலும் ஈ அடிச்சான் காப்பி கொஞ்சம் அழுகுனி ஆட்டம்தான்//
இந்த அழுகுனி ஆட்டம் குறித்த பிரக்ஞையே இல்லாதிருப்பதுதான் மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது.
நண்பர் ஜாக்கிக்கு நன்றிகள் பல...
அன்பு நித்யன்
//
ReplyDeleteஅரியாங்குப்பத்தார் said...
விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்திகளும் சிறப்பாகத்தான் இருந்தது. சட்டத்தை காரணம் காட்டி அது முடக்கப்பட்டது. அதில் செய்தி வாசித்த கோபிநாத் தவிர அனைவரையும் சன் செய்தி இழுத்துக் கொண்டது.
பிறரை முடக்கி, பிறரின் சிந்தனைகளை திருடி அல்லது படியெடுத்து வெற்றிபெற நினைப்பது திறமை அல்ல. அது பச்சை அயோக்கியத்தனம்.
//
மிகச் சரியாகச் சொன்னீர்கள் நண்பரே
//
ReplyDeleteKay said...
(கல்யாணமாகாத பொண்ணப் பத்தி இப்படி பேசலாமா?),
அந்த அம்மாவுக்கு கல்யாணம் ஆகலனு யாருங்க சொன்னது she is seperated //
sorryங்க எனக்குத் தெரியல...
தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
அன்பு நித்யன்
//
ReplyDeleteஸ்ரீதர் said...
என்னதான் சொல்லவரீங்க???!!
//
எல்லாம் மாயை
அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......
ReplyDeleteஅன்புடன்
காவேரி கணேஷ்
kaveriganesh.blogspot.com
நான் ரொம்ப நாளாக எழுத நினைத்திருந்த விசயம். நீங்கள் எழுதியதற்கு நன்றி. ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சியை விட்டுவிட்டீர்களே? தமிழ்பற்றை ஜல்லியடித்து பிளைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் கட்சி சார்ந்த டி.வி.க்கள் இப்படி உருப்படியான ஒரு நிகழ்ச்சியை நடத்தவில்லையே? பொதிகையில் மட்டும்தான் தமிழில் மேடைப்பேச்சு போட்டி முன்பு குமரி அனந்தன் தலைமையில் வந்தது. புதிய நிகழ்ச்சிகள் மட்டுமல்ல வழக்கமான பாட்டுப் போட்டி போன்ற நிகழ்ச்சிகளில் கூட பல புதுமைகளை விஜய் டி.வி. செய்தது. சூப்பர் சிங்கர் ஜூனியர் என் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று. எல்லா டி.விக்களும் காப்பி அடிக்க, திடீரென தனி நபர் நடனப்போட்டியை, ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ எனக் கொண்டு வந்தது.
ReplyDeleteவிஜய் டி.வி.க்கு நன்றி.
அனுஹாசன் கல்யாணம் ஆகாதவரா?
ReplyDeleteஅது எதாவது இருந்துட்டு போகட்டும்,முதல்ல வாழ்த்துகள் ரொம்ப நாள் கழித்து ஒரு பதிவை தந்தமைக்கு.
எனது மனமார்ந்த வாழ்த்துகள் விஜய் தொலைக்காட்சிக்கும் உங்களுக்கும்
ReplyDelete///
ReplyDeleteKaveriGanesh said...
அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......
அன்புடன்
காவேரி கணேஷ்///
நடுவில் வந்து ஓட்டு வேட்டை நடத்திய நண்பருக்கு வாழ்த்துக்கள். அப்படியே இந்த பதிவு பற்றி இரண்டு வரி சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.
நித்யன்
///
ReplyDeleteசாணக்கியன் said...
நான் ரொம்ப நாளாக எழுத நினைத்திருந்த விசயம். நீங்கள் எழுதியதற்கு நன்றி. ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சியை விட்டுவிட்டீர்களே? தமிழ்பற்றை ஜல்லியடித்து பிளைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் கட்சி சார்ந்த டி.வி.க்கள் இப்படி உருப்படியான ஒரு நிகழ்ச்சியை நடத்தவில்லையே? பொதிகையில் மட்டும்தான் தமிழில் மேடைப்பேச்சு போட்டி முன்பு குமரி அனந்தன் தலைமையில் வந்தது. புதிய நிகழ்ச்சிகள் மட்டுமல்ல வழக்கமான பாட்டுப் போட்டி போன்ற நிகழ்ச்சிகளில் கூட பல புதுமைகளை விஜய் டி.வி. செய்தது. சூப்பர் சிங்கர் ஜூனியர் என் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று. எல்லா டி.விக்களும் காப்பி அடிக்க, திடீரென தனி நபர் நடனப்போட்டியை, ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ எனக் கொண்டு வந்தது.
விஜய் டி.வி.க்கு நன்றி.
///
மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியைப் பற்றி எழுதும் நம் மற்ற பதிவர்கள், அதில் நடுவராக வரும் நெல்லை கண்ணன் பற்றி வருத்தப்படுவதையே பதிவாக எழுதுகிறார்கள். அந்த நிகழ்ச்சியின் தனித்தன்மை பாராட்டிற்குரியது.
உங்கள் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன். நண்பர் சாணக்கியனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்பு நித்யன்
///
ReplyDeleteநாடோடி இலக்கியன் said...
அனுஹாசன் கல்யாணம் ஆகாதவரா?
அது எதாவது இருந்துட்டு போகட்டும்,முதல்ல வாழ்த்துகள் ரொம்ப நாள் கழித்து ஒரு பதிவை தந்தமைக்கு.
///
எப்போது எழுதினாலும் பின்தொடர்ந்து வந்து வாழ்த்துச் சொல்லும் நண்பர் நாடோடி இலக்கியனுக்கு அன்பான நன்றிகள்.
பேரன்புடன் நித்யன்
///
ReplyDeleteபாண்டித்துரை said...
எனது மனமார்ந்த வாழ்த்துகள் விஜய் தொலைக்காட்சிக்கும் உங்களுக்கும்
///
நண்பர் பாண்டித்துரைக்கு நன்றிகள் பல
அன்பு நித்யன்
திரு.நித்யகுமாரன்,
ReplyDeleteதங்கள் பதிவு பெரும்பாலான மக்களின் உணர்வென்றால், மிகையில்லை. தொடர்ந்து இவ்வண்ணம் எழுதவும். வாழ்த்துக்கள்.
ஸ்ரீ...
அன்பர் ஸ்ரீ ....
ReplyDeleteதங்களின் வாழ்த்துதல்களுக்கு மிக்க நன்றி
அன்பு நித்யன்
எவண்டா அவன் எனக்குத் தெரியாம இம்மாம் பெரிய பதிவைப் போட்டவன்..?
ReplyDeleteஅவனவன் பெட்ரோல் கிடைக்காம ரோட்டுல வண்டியை போட்டுட்டு நாக்குத் தள்ளிக்கிட்டிருக்கான்.. இதுல ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆயிருச்சா? ஆகலையான்றது இப்ப ரொம்ப அவசியமா..?
சரி.. சரி.. மேட்டருக்கு வரேன்.. காப்பியடித்தலில் சன் டிவியை கலைஞர் டிவி முந்திக் கொண்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும்.. மானாட மயிலாட ஹிட்டுக்கு முதல் காரணம் மச்சான்ஸ் புகழ் நமீதாதான்.. அது அப்படியே இன்றுவரை தொடர்ந்து வருகிறது.
விஜய் டிவியின் நிகழ்ச்சிகூட ஏதோ ஒருவிதத்தில் வெளிநாட்டு நிகழ்ச்சி ஒன்றின் inspirationதான்.. அதனால் எல்லாமே இங்கிருந்துதான் எடுக்கப்பட்டது என்று நினைத்து ஆறுதல்பட்டுக் கொள்ளலாம்.
(விஜய் டிவில எதுனாச்சும் கொடுத்தாங்களா தம்பி..)
////
ReplyDeleteஉண்மைத் தமிழன்(15270788164745573644) said...
எவண்டா அவன் எனக்குத் தெரியாம இம்மாம் பெரிய பதிவைப் போட்டவன்..?
அவனவன் பெட்ரோல் கிடைக்காம ரோட்டுல வண்டியை போட்டுட்டு நாக்குத் தள்ளிக்கிட்டிருக்கான்.. இதுல ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆயிருச்சா? ஆகலையான்றது இப்ப ரொம்ப அவசியமா..?
சரி.. சரி.. மேட்டருக்கு வரேன்.. காப்பியடித்தலில் சன் டிவியை கலைஞர் டிவி முந்திக் கொண்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும்.. மானாட மயிலாட ஹிட்டுக்கு முதல் காரணம் மச்சான்ஸ் புகழ் நமீதாதான்.. அது அப்படியே இன்றுவரை தொடர்ந்து வருகிறது.
விஜய் டிவியின் நிகழ்ச்சிகூட ஏதோ ஒருவிதத்தில் வெளிநாட்டு நிகழ்ச்சி ஒன்றின் inspirationதான்.. அதனால் எல்லாமே இங்கிருந்துதான் எடுக்கப்பட்டது என்று நினைத்து ஆறுதல்பட்டுக் கொள்ளலாம்.
(விஜய் டிவில எதுனாச்சும் கொடுத்தாங்களா தம்பி..)
///
அண்ணாத்த உங்களோட பதிவ compare பண்றச்ச, இதெல்லாம் தலைப்பு மட்டும்தான்.
புதுப்புது inspiration களை சன் மற்றும் கலைஞர் பார்க்கமுடியவில்லை என்பதுதான் வருத்தம்.
விஜய் டிவியில எதுனா கொடுத்தா உங்களுக்கு சொல்லாமலா...?
தம்பி நித்யன்