Friday, February 20, 2009

முடியலங்க சாரு...

முடியலங்க...

முடியல...

சாருவின் நடுநிலைமையைப் பற்றி நினைக்கும் போது... முடியலங்க...

எப்பப்பாத்தாலும் ஜெயமோகனைப் பத்தி எதாவது எழுதாட்டி அவரால இருக்க முடியாது. சுஜாதா மிகச் சரியாகவே சொன்னார். ராஸ லீலாவையும் ஜீரோ டிகிரியையும் காசு குடுத்து வாங்கி படிச்சவன் நான். சரோஜாதேவி, மருதம் மாதிரி புத்தகம் படிக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலோ என்னவோ சாரு பிடித்துப் போனது. காமக் கதைகளை அவருடைய தளத்தில் டீக்கடையில் தினத்தந்தி படிப்பதைப் போல ஓசியாகத்தான் படித்தேன். அதப்பத்தியும் பல தடவை அவரு கடிதம் எழுதி நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன், யாராவது டாலர்ல பணம் அனுப்பி வையிங்கன்னு கேப்பாரு. அப்பல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும்.

யாராவது பணம் அனுப்பி வச்சீங்கன்னா இதே மாதிரி ஓசியில மத்தவங்க படிக்கலாம். இல்லன்னா கஷ்டம்னு எழுதுனாரு. எனக்கு ஒரு மாதிரி பீலிங்கா ஆயிடுச்சு. யாரோ சில தொரைங்க வெளிநாட்டுல இருந்து பணம் அனுப்பி வச்சதனால மட்டுமே நமக்கு இந்த காமக்கதைகளெல்லாம் ப்ரீயா படிக்க முடியுதோன்னு ஒரு கில்ட்டி பீலிங் வந்துடுச்சு. என்ன நடந்தாலும் கொஞ்சங்கூட அசையாம இருக்குற தமிழனா இருந்ததால, சரி சரின்னு தொடச்சு விட்டு்ட்டு படிச்சுக்கிட்டுதான் இருந்தேன்.

ராஜேஷ்குமார் நாவல்களும் பாலகுமாரன் நாவல்களும் ஒரு கட்டத்துக்கு மேல சலிச்சுப்போற மாதிரி சரோஜாதேவியைப் போன்ற எழுத்துகளின் மற்றொரு வடிவான காமக்கதைகளும் சலிக்கத்தான் துவங்கின. சரி இவரிடமிருந்து வேறு என்னதான் வித்தியாசமாக இருக்கிறது, என தேடத்துவங்கினால் “உன்னையெல்லாம் பாத்தா ரொம்ப பாவமாயிருக்கு” என்கிற ரீதியில் நான் பார்க்கப்பட்டேன். நமக்கு இருக்குற பிஸினஸ் டார்ச்சர்ல இதவேற தாங்கமுடியாதுன்ன சுகுறா தெரிஞ்சு போச்சு. அதிவீரபாண்டியன் அர்த்தஜாமக்கதைகள் என்கிற அடுத்த கட்டம் படிக்க முடியலங்க. இன்னா பண்றதுன்னு புரியல.

அலைபாயுதே குடுத்த அதே மணிரத்னம்தான் கன்னத்தில் முத்தமிட்டாலும் பண்ணாரு. அடுத்தடுத்த தளங்களுக்கு தாவிக்கொண்டே இருக்க வேண்டிய எழுத்து, சீனித்துண்டை சுற்றுகிற எறும்புகளைப்போல ஒரே இடத்திலேயே சுற்றுகிறது. பாவம். படிக்கிற நம்மளத்தான் சொல்லுறேன்.

சாருவின் கொடுமைகளை விட கொடுமையானவை, அவருக்கு பல்லக்கு தூக்கும் குறிவருடிகளின் (அடிவருடிகள் என்பன போன்ற வார்த்தைகள் எல்லாம் சாருவைப் பொறுத்தவரை சப்பையானவை) கருத்தாக்கங்கள். சாரு தன்னையும் ஜெமோவையும் எம்.ஜி.ஆர். சிவாஜி போலவும், ரஜினி கமல் போலவும், அஜீத் விஜய் போலவும், சிம்பு தனுஷ் போலவும் உருவாக்கி எழுதும் பிம்பங்கள் நான்கடவுளில் ஜெமோ எழுதிய வசனங்களை விட நகைச்சுவை நெடி படைத்தவை.

பொது இடத்தில் பலமான ஓசையுடன் காற்று பிரிவதைப் போலவும், பாத்ரூமில் சுச்சு போகும்போது பலமான ஓசையுடன் கோப்பையில் விழுகையில் வெளியிலிருப்போருக்கே கேட்டு விடுமோ என்பது போலவும் ஒரு வெட்கமான உணர்வு சாருவின் எழுத்துக்களை படிக்கையில் மேலிடுகிறது. இப்படிப்பட்ட உதாரணங்களை யோசிக்கவும் எழுதவும் முடிகிற துணிச்சல் சத்தியமாக சாருவிடமிருந்துதான் வந்தது.

அழகிரி ஓர் அப்பாவி மனிதர் எனச் சொல்லுவதிலாகட்டும், அவருடைய நடவடிக்கைகள் அராஜகம் எனச்சொல்லி ஆட்டோ வருமோ என நக்கலடிப்பதிலாகட்டும் அவர் ஒரு சிறந்த நடுநிலைவாதிதான். கனிமொழியோடு மிக்க அன்பு பாராட்டுகிறாராம். இப்போது கருணாநிதி அரசை கலைக்கச் சொல்கிறாராம். என்ன ஒரு நடுநிலையான கருத்துக்கள். சாரு சொல்லிவிட்டார் அவ்வளவுதான் இனி இந்த அரசு கலைக்கப்பட்டு விடும். உடன்பிறப்புக்களே திரண்டெழுங்கள்.

தமிழ்நாட்டு வீதிகளெங்கும் முனைக்கு முனை இன்னும் அதிகம் டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டும் என்பன போன்ற புரட்சிகரமான கருத்துக்களுக்கு இவர் சொந்தக்காரர்.

“அவர் செய்த நன்று ஒன்று உளக் கெடும்” என்ற திருக்குறளின் போதனைக்கேற்ப ராஸலீலாவின் சில பத்திகளுக்காகவும், காமக்கதைகளின் சில அத்தியாயங்களுக்காகவும் அவர் (என்) பாராட்டுதலுக்குரியவர்.

எனக்குத்தெரிந்த வரையில் ஜெயமோகன் நினைத்தபோதெல்லாம் இவரைப்பற்றி எழுதி வாருவதில்லை. உ.த.எ. என்று அடைமொழி கொடுத்து அவரைப் பற்றி எழுதி தான் லைம்லைட்டுக்கு வருவதில் சாருவுக்கு பாரிஸ் கார்னர் சரக்குகளைவிட அதிகமான போதை வரலாம்.

நமக்குத்தான் சகிக்கவில்லை.

13 comments:

  1. nethiyadi. He does not have any stand. If u read his writings critically u'll understand how malechavenistic he is and His mind set is brahminic. he has to be rejected

    ReplyDelete
  2. nethiyadi. He does not have any stand. If u read his writings critically u'll understand how malechavenistic he is and His mind set is brahminic. he has to be rejected

    ReplyDelete
  3. nethiyadi. He does not have any stand. If u read his writings critically u'll understand how malechavenistic he is and His mind set is brahminic. he has to be rejected

    ReplyDelete
  4. nethiyadi. He does not have any stand. If u read his writings critically u'll understand how malechavenistic he is and His mind set is brahminic. he has to be rejected

    ReplyDelete
  5. நண்பர் செல்வா அவர்களுக்கு நன்றி. உங்களின் கருத்துக்கள் அத்தனையுடனும் நான் உடன்படவில்லை.

    யார் யாரை தன்னுடன் வைத்துத்தாங்கவேண்டும் என்பதை காலம் முடிவு செய்யும் நண்பரே...

    நன்றிகள் பல

    அன்பு நித்யன்

    ReplyDelete
  6. Muluvathum padithuvittu oru nimidam kan moodiya pothu Hostel Coridaril Java Vinodudan nee vivathippathu pola irunthathu . pulavarin vegam satrum kuraiya villai

    Anbu

    ReplyDelete
  7. இவன் யாரைய்யா ஒரு பன்னாடை? தெரியவே மாட்டெங்குதே?

    ReplyDelete
  8. எனக்கென்னவோ சாருவை நீங்கள் தீட்டினாலும் உள்ளுக்குள் நீ்ங்கள் ரசிப்பதாகவே உங்கள் எழுத்து சொல்கிறது நண்பரே....

    ReplyDelete
  9. பொது இடத்தில் பலமான ஓசையுடன் காற்று பிரிவதைப் போலவும், பாத்ரூமில் சுச்சு போகும்போது பலமான ஓசையுடன் கோப்பையில் விழுகையில் வெளியிலிருப்போருக்கே கேட்டு விடுமோ என்பது போலவும்//

    அற்புதமான வரிகள் ஆழ்ந்த கருத்துக்கள்

    ReplyDelete
  10. அழகா, ஆழமா எழுதி இருக்கீங்க, நித்யா. அவர் எழுத்துக்களையும் பலர் எழுத்துக்களையும் ஆழமாகப் படித்த ஒருவர்தான் இது போல் எழுத முடியும்.

    உண்மைதான் அவருக்குனு ஒரு ஜால்ரா கூட்டம் அலையுது. என்னை கேட்டால் உங்களைப் போல் என்னைப் போல் அவருடைய பலஹீனத்தை, குறைகளை தைரியமாக விமர்சனம் செய்பவர்கள்தான் அவருக்கு ஒரு வகையில் உதவுகிறோம். ஜால்ரா அடிப்பவர்கள் சாருவை மேலும் மேலும் கெட்ட வழியில் அனுப்புகிறார்கள். அவரின் எதிரிகள் அவர்கள்தாம்.

    உங்கள் விமர்சனத்தை படித்து அவரை நல்ல எழுத்தாளாராக மாற்றிக் கொள்வாரா? அந்த அளவுக்கு திறந்த மனப்பாங்கு அல்லது பக்குவம் உண்டா அவரிடம்? இல்லை அவர் தன்னை துதிபாடுபவர்களை ரசிக்கும் "கடவுள்" போன்ற மூளையும், இதயமும் இல்லாத ஒரு கல் இனமா?

    இல்லை ஜால்ராக்கள் ஆசையை நிவர்த்திசெய்ய காமப்பாதையில் முழுவதும் இறங்கிவிடுவாரா?

    பார்க்கலாம்! :)

    ReplyDelete
  11. அழகா, ஆழமா எழுதி இருக்கீங்க, நித்யா. அவர் எழுத்துக்களையும் பலர் எழுத்துக்களையும் ஆழமாகப் படித்த ஒருவர்தான் இது போல் எழுத முடியும்.

    உண்மைதான் அவருக்குனு ஒரு ஜால்ரா கூட்டம் அலையுது. என்னை கேட்டால் உங்களைப் போல் என்னைப் போல் அவருடைய பலஹீனத்தை, குறைகளை தைரியமாக விமர்சனம் செய்பவர்கள்தான் அவருக்கு ஒரு வகையில் உதவுகிறோம். ஜால்ரா அடிப்பவர்கள் சாருவை மேலும் மேலும் கெட்ட வழியில் அனுப்புகிறார்கள். அவரின் எதிரிகள் அவர்கள்தாம்.

    உங்கள் விமர்சனத்தை படித்து அவரை நல்ல எழுத்தாளாராக மாற்றிக் கொள்வாரா? அந்த அளவுக்கு திறந்த மனப்பாங்கு அல்லது பக்குவம் உண்டா அவரிடம்? இல்லை அவர் தன்னை துதிபாடுபவர்களை ரசிக்கும் "கடவுள்" போன்ற மூளையும், இதயமும் இல்லாத ஒரு கல் இனமா?

    இல்லை ஜால்ராக்கள் ஆசையை நிவர்த்திசெய்ய காமப்பாதையில் முழுவதும் இறங்கிவிடுவாரா?

    பார்க்கலாம்! :)

    ReplyDelete
  12. நல்ல ஆய்வு நண்பா.. தமிழில் அவர் தொட்டு எழுதும் விஷயங்களை மற்றவர் எழுதாத சூழலில் தான் அவர் தன்னைத்தானே கொஞ்சம் அதிகமாக பில்ட்டப் செய்து கொள்கிறார்.. இப்போது எழுதி வரும் அர்த்தஜாமக் கதைகள் நல்லா இல்லை எனபது உண்மை.. முந்தி இருந்த கேலியும் கிண்டலும் கூட குறைந்து போனது.. எனக்கென்னமோ அவருடைய குணத்தை பார்ப்பதை விட எழுத்துக்களை மட்டும் படித்தால் போதும் எனத் தோன்றுகிறது.

    ReplyDelete
  13. எழுதி ரொம்பநாள் ஆகிறதே நித்யா? பார்த்தும் கூட அதைவிட அதிகநாள் ஆகிறது.

    நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar