Saturday, May 9, 2009

தேர்தலும் தேர்தல் நிமித்தமும்


ப்ரியாமானவர்களுக்கு வணக்கம்.

நீண்ட இடைவெளியாகிவிட்டது, பதிவெழுதி.  அடடே...  Junoon வசனம் போல முதல் வாக்கியம் அமைந்து விட்டதே...  பரவாயில்லை.  தொலைக்காட்சி நாடகங்களுக்கு வசனம் எழுதும் தகுதி வந்துவிட்டதாக பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.  முருகனின் அருள் நிரம்பப்பெற்ற உண்மையான தமிழர் ஒருவர் பற்றிய கிசு கிசு ஒன்று குதிரை ஓட்டுநர் ஒருவரிடம் கிடைக்கிறது.  நமீதாவின் புது பாய் பிரண்ட் யாரென்று தெரிந்து வைத்திருக்கும் நண்பர்கள் மட்டும் அவரிடம் சரியான விடையைச் சொல்லி கிசுகிசுவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

சாருவைப் பற்றி 3 மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய ஒரு பதிவிற்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்ததும் நான் புளகாங்கிதமடைந்து விட்டதால் பெரிதாக எழுதத் தோன்றவில்லை.  சாருவைப் பற்றி எழுதியவுடன் லக்கிலுக் நினைவும் வந்துவிட்டது. சமீபத்தில் பதிவர் லக்கிலுக் நம்ம ப்ளாக்கில் ஒரு கமெண்ட் இட்டிருந்தார்.  “நீங்கள் எழுதி ரொம்ப நாளாகிவிட்டது, பார்த்து அதைவிட நாளாகிவிட்டது” என்று.  அவருக்குத் தெரியாத ஒரு விஷயம்,  நானும் மடிப்பாக்கத்துவாசி என்பது.  அட நமீதா சைஸிற்கு பெரிய பதிவரான இவரும் நம்ம பதிவை படிக்கிறாரோ என்று நினைத்தேன்.  கௌசல்யா ரேஞ்சிற்கு பதிவெழுதும் நம்மையும் நமீதா பின்தொடர்வது நினைத்தால் சந்தோஷம் தானே... Just for fun, கௌசல்யா கோவித்துக்கொள்ள வேண்டாம்... (யார் கண்டது கௌசல்யா கூட இதைப் படிக்கலாம்)

பாரதிராஜா அவர்கள் தலைமையில் திரைப்படக் குழுவினர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 (“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” - உபயம்: தொல்.திருமா) தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள், அக்கட்சிக்கு எதிராக.  அவர்களுக்கு எதிராக அவர்களே சிறப்பாக வேலை செய்து கொள்வார்கள் என்பதால்,  பாரதி ராஜா குழுவினருக்கு டென்ஷன் வேண்டாம்.  அவர்களின் பணிக்கு வாழ்த்துக்கள்.  சமீபத்தில் சீமானின் பேச்சை விண் டிவியில் கேட்டேன்.  இலங்கை ராணுவம் தலையில் போட்ட பாஸ்பரஸ் குண்டுகளை ஒத்த வார்த்தைகள்.  

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நமக்கு அலர்ஜி தரக்கூடியவை.  ஆனாலும் டிவியில் அவற்றை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.  எழுதி வைத்த காகிதங்களில் உள்ளவற்றை படிக்கும் ஜெயலலிதாவின் பேச்சு ஒரே மாதிரி இருந்தது.  போகப்போக விஷயங்களை சேர்த்துக் கொண்டே வருகிறார்.  கலைஞர் திருச்சியில் மட்டுமே பேசினார்.  உடல்நலக் கோளாறு காராணமாக மருத்துவமனையிலிருக்கும் அவர் எப்படியும் 10ந் தேதி தீவுத்திடலுக்கு வந்து சோனியாவுடன் இணைந்து பிரச்சாரம் செய்வாரென்று எதிர்பார்க்கலாம்.

 ஸ்டாலினின் பேச்சு சுகிக்கவில்லை.  ராமதாஸை ஒரு பிடி பிடிக்கிறார்.  என்னிடம் வந்து அரசியல் பாடம் கற்றுக்கொள் என்று அழைக்கிறாயே,  என்று ஆரம்பித்து நீ,  உன்னை என்று ஒருமையில் ஏக வசனம்.  திடீரென நடுவே “டாக்டர் ராமதாஸ் அவர்கள்” என்கிறார்.  ஒன்றும் பிரியவில்லை.  கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்,  மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டிக் கொண்டேயிருந்தார்கள்.  மேடைப் பேச்சில் சிங்கமென கர்ஜிக்கும் வைகோ மாத்திரம் பொடா கைதிற்குப் பிறது திமுக விலேயோ அல்லது திமுக கூட்டணியிலேயோ ஐக்கியமாகியிருந்தால்,  அவருக்கும் திமுக விற்கும் பிரகாசமான எதிர்காலமாக இருந்திருக்கும்.  பாவம் 4 சீட் முக்கி முக்கி வாங்கிக் கொண்டு ஜெயலலிதா கை காட்டுபவரே பிரதமர் என்கிறார்.  பார்க்கப் பாவமாய் இருக்கிறது.  

ராமதாஸ் தானொரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை தேர்தலுக்குத் தேர்தல் ஒவ்வொரு கட்சிக்கும்,  பொதுமக்களுக்கும் நிருபித்துக் கொண்டேயிருக்கிறார்.  திருமா வளவனைப் பார்க்க பாவமாயிருக்கிறது.  மடிப்பாக்கம் வேலாயுதத்தை வேட்பாளராக அறிவித்து பிறகு மாற்றி அவரும் தன்னுடைய வழியைப் பற்றி தெளிவு படுத்திவிட்டார்.  

கேப்டனைப் பற்றித்தான் யாரும் செய்தி தருவதில்லை.  விஜய் டிவியில் அவருடைய மண்டபம் இடிந்த வீடியோ காட்சியை விளம்பரப் படுத்தி தான் திமுக ஓட்டையும் பிரிக்கப் போகிறேன் என சொல்கிறார்.  அடுத்த வாரம் இந்நேரம் எல்லாம் தெரிஞ்சு போயிருக்கும்.  அதுக்கடுத்த வாரம் நாம எல்லாத்தையும் மறந்துட்டு வேற வேலையைப் பாக்க போயிருப்போம்.  அரசியல் வியாபாரிகளும் அவரவர் வேலையைப் பார்க்கப் போயிருப்பார்கள்.  இது காலங் காலமாக நடப்பதுதானே...

அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் பெருவாரியான ஊடகங்கள் இருக்கும் வரை மக்களிடம் நேர்மையான கருத்துகள் சென்று சேராது.  சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி, மக்கள் டிவி - இவை அனைத்தும் கட்சி சார்ந்தவை.  விஜய் டிவியில் செய்தி இல்லை.  தயாநிதி மாறனின் கைங்கர்யத்தால் நிகழ்ந்த சோகம் அது.  நடுநிலையான ஊடக அமைப்புகளும் Survival - என்கிற கட்டாயத்தால் ஒரு பால் சார்ந்து இயங்கும் நிலை அமைகிறது.  

உண்மையிலேயே நல்லவன் ஒருவன் ஒரு கட்சி அமைக்க வேண்டும்.  அந்த கட்சியின் கொள்கைகள் பிடித்து எக்கச்சக்கமாக தொண்டர்கள் சேர வேண்டும். அவன் ஒரு தொலைக்காட்சி, ஒரு பத்திரிகை அமைக்க வேண்டும்.  அவை மிகவும் வெற்றிகரமாக மக்களைச் சென்று அடைய வேண்டும்.  அந்த டிவியில்தான் மக்கள் தொடர் மற்றும் சினிமா பார்க்க வேண்டும்.  பிறகு அந்த ஊடகங்களின் வழியாக விளம்பரம் செய்து அந்த நல்லவன் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்.  அந்த நல்லவன் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகும் நல்லவனாகவே இருக்க வேண்டும்.  இதுவெல்லாம் நடந்தாத்தான் நாடு நாடா இருக்கும்.  இல்லாட்டி அம்புட்டுதான்.  ஒன்னும் சொல்றதுக்கில்ல.

49 - O வை மின்னணு வாக்கு இயந்திரத்தில் வைப்பதற்குக்கூட பயந்து நடுங்கி ஒன்னுக்குப் போகும் அரசியல் வாதிகளுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவது எப்படி என்றும் பிரியவில்லை.  

ஆனாலும் தயவுசெஞ்சு ஓட்டுப் போடுங்கள் நண்பர்களே...  பிஹாரில் நடந்ததைப் போல 37% ஓட்டு விழுவது ஜனநாயகமே அல்ல.  காஷ்மீரில் அதைவிடக் குறைவு என்பதற்கு தர்க்கரீதியான காரணங்கள் உள்ளன.  49 - O வையாவது குறைந்தது பதிவு செய்யுங்கள்.  வெட்டி நியாயம் பேசிட்டு ஓட்டு போடாம விட்டுடாதீங்க.  ஓட்டு போடாட்டி என்ன நடக்கும தெரியுமா? நீங்க பஸ்ல போகும்போது மொக்கையான படம் அல்லது விஜய் படம் போடுவாங்க...  


திரும்ப ரெண்டு மாசம் கழித்து யாராவது திட்டினால், பதிவெழுதுகிறேன்.

பேரன்புடன் 
நித்யகுமாரன்.


15 comments:

 1. //அட நமீதா சைஸிற்கு பெரிய பதிவரான இவரும்//

  :-(

  ReplyDelete
 2. //

  லக்கிலுக் said...

  //அட நமீதா சைஸிற்கு பெரிய பதிவரான இவரும்//

  :-(

  //

  லக்கி வருத்தப்பட வேண்டாம். பெரிய பதிவரென்பது உடல்வாகைப் பொறுத்ததல்ல...

  :-)

  ReplyDelete
 3. பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் மேய்ந்ததால் பெரிய.......(தப்பா என் வாயால எதுவும் சொல்லல..)

  ReplyDelete
 4. அன்பு நண்பர் தண்டோரா...

  உங்கள் வாயால் தப்பா எதுவும் சொல்லாமல் இருக்க வேண்டும். நல்லதே நினைப்போம் நல்லதே பேசுவோம். நல்லதே நடக்கும்.

  ஆயினும் 10 லட்சம் என்பது ஒரு பெரிய விஷயம்தான். அதில் எந்தவொரு மாற்றுக் கருத்துமில்லை.

  Cool

  நித்யன்

  ReplyDelete
 5. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நமக்கு அலர்ஜி தரக்கூடியவை. ஆனாலும் டிவியில் அவற்றை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. எழுதி வைத்த காகிதங்களில் உள்ளவற்றை படிக்கும் ஜெயலலிதாவின் பேச்சு ஒரே மாதிரி இருந்தது.--//

  ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதான் தெரிஞ்சுதா தலை ஆனால் நல்ல பதிவு

  ReplyDelete
 6. நிறைய எழுதுங்க தலை எப்ப பார்த்தாலும் கொடை நாட்டுல ரெஸ்ட் எடுப்பது போல ரெஸ்ட் எடத்து எழுதுறிங்க...

  காலை ஆட்டுங்க இல்லை வேனாம் எதையாவது ஆட்டுங்க அப்பதான் உலகம் மதிக்கும்

  ReplyDelete
 7. //
  jackiesekar said...

  நிறைய எழுதுங்க தலை எப்ப பார்த்தாலும் கொடை நாட்டுல ரெஸ்ட் எடுப்பது போல ரெஸ்ட் எடத்து எழுதுறிங்க...

  காலை ஆட்டுங்க இல்லை வேனாம் எதையாவது ஆட்டுங்க அப்பதான் உலகம் மதிக்கும்

  //

  ஆட்டிட்டா போச்சு...

  தமிழ்நாடு தெரியும் அது என்ன கொடை நாடு? எல்லாருக்கும் வாரி வாரி கொடுப்பாங்களா? டவுட்டை கிளியர் பண்ணவும்...

  அன்பு நித்யன்

  ReplyDelete
 8. தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதன் விவரம்:

  திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

  அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

  இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

  ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா

  ReplyDelete
 9. //திரும்ப ரெண்டு மாசம் கழித்து யாராவது திட்டினால், பதிவெழுதுகிறேன்//

  உடனே அடுத்த பதிவு உங்களிடம் உங்களிடமிருந்து வரவழைக்க‌ என்ன செய்யலாம்...திட்டினால் ரெண்டுமாசம் கழித்துதான்றீங்க பேசாம‌அடிச்சிரலாமா?

  ReplyDelete
 10. நீ என்ன பெரிய எழுத்தாளரா.? நீ எழுதிடுவியா..? முடிஞ்சா எழுதிபாரேன்.. அவனை இவனை கு
  றை சொல்றே..? அவன் அளவுக்கு உன்னால எழுத முடியுமா.. ? சும்மா பேசாதே... செயல்ல காட்டு.. வெறும் பேச்சு கதைக்கு உதவாது.. நீ அவ்வளவு பிஸியா.?


  :)

  ReplyDelete
 11. ///Cable Sankar said...
  நீ என்ன பெரிய எழுத்தாளரா.? நீ எழுதிடுவியா..? முடிஞ்சா எழுதிபாரேன்.. அவனை இவனை குறை சொல்றே..? அவன் அளவுக்கு உன்னால எழுத முடியுமா.. ? சும்மா பேசாதே... செயல்ல காட்டு.. வெறும் பேச்சு கதைக்கு உதவாது.. நீ அவ்வளவு பிஸியா.?
  :)///

  தம்பி..

  இன்னாபா இந்தாளு ஜூன் மாச பொங்கலுக்கு ஜூலை மாசத்துல வந்து நிக்குறாரு..!

  ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar