Wednesday, February 13, 2008

உன் காதலும்... என் காதலும்...


எனை தூரப்பார்த்து உற்சாகப்படுவதிலும்
பக்கத்தில் வந்து பதட்டப்படுவதிலும்
இடம்வலம்இடம்வலம்இடம்வலம்
என அல்லோலகல்லோலப்படும் உன் விழிகளிலும்
பேசவரும் வார்த்தைகளையெல்லாம்
உதடுமடித்து எனக்கே வலிக்குமளவு நீ கடித்தலிலும்
நீண்டும்சுருங்கியும் நீண்டும்சுருங்கியும்
பாடுபடும் உன் உதடுகளின் ஓரவஞ்சனை சிரிப்புகளிலும்
சரியாயிருக்கும் ஆடையை சரிப்படுத்திக்கொண்டேயிருக்கும்
உன் பதட்டம் தோய்ந்த மென்காந்தள் விரல்களிலும்
வழிந்தோடுகிறது
என் மீதான உன் காதல்

இதையெல்லாம்
கண்டு ரசித்து உண்டு கொழுத்து
பேரண்டமாய் விரிந்து வளர்ந்து
எனை படுத்துகிறது
உன் மீதான என் காதல்

6 comments:

  1. கண்டு ரசித்து உண்டு கொழுத்து
    பேரண்டமாய் விரிந்து வளர்ந்து
    எனை படுத்துகிறது
    உன் மீதான என் காதல்

    orukathal, innoru kaathalai undu koluthu...
    vithiyasam thaan - undukolukkum kaathal ungkal kaathal

    ReplyDelete
  2. Well, let me write some negative comments on my friend's perspective. I feel like people oscillate between two extremes when writing about Women.

    1) Casting her as a cinematic stereotype.

    2) Casting her as a "PudumaiPen" sort of...

    They are not either of them. They are some where in between and they possess both in right blend. In other words they are just like Men.

    I happen to write this as I see my friend writes often from View(1).
    I guess he should have written
    a few from View(2) as well.

    What many people miss is what I was just quoting.

    Thanks.

    PS: Bear with my laziness with typing in Tamizh.(Sarchaikali kilapinaal taanae suvayaah irukum..hehe)

    ReplyDelete
  3. வினோத்...

    காதல் பற்றி கவிதை எழுதியே தீர வேண்டும் என்ற வேட்கையில் அமரும் கவிஞர்களின் கவிதைகளுக்கும், காதல் செய்து கொண்டிருக்கும் காதலர்களின் வார்த்தைகளினின்று உருப்பெரும் கவிதைகளுக்கும் அடிப்படையிலேயே பல வித்தியாசங்கள் உண்டு.

    உங்கள் கூற்றும் முற்றிலும் உண்மை. பெண்மையைக்கண்டு வியந்து (விழி, வாய் எல்லாம் விரிய) பார்க்கும் பார்வைகளில் உங்களின் view 1 ரீதியிலான கவிதைகளும், ஓரிரு சந்திப்புகளுக்குப்பின் ஏற்படும் சிந்திப்பில் பிறக்கும் கவிதைகளில் உங்களின் view 2 ரீதியிலான கவிதைகளும் பிறக்கும் என்று எண்ணுகிறேன். உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன். தமிழில் எழுதினால், படிக்கும் அனைவரும் ரசிக்கலாம்.

    view 2 விற்கும் முயற்சிக்கிறேன்....

    நன்றி.

    ReplyDelete
  4. உங்களின் சில்லரைகள் எழுப்புவது எப்போதும் காதல் ஓசை மட்டும் தானா :) ஓசைகள் அழகுதான்!

    ReplyDelete
  5. //கண்டு ரசித்து உண்டு கொழுத்து
    பேரண்டமாய் விரிந்து வளர்ந்து
    எனை படுத்துகிறது
    உன் மீதான என் காதல்//

    வார்த்தைப் பிரயோகம் பிரமாதம்!

    ReplyDelete
  6. Vaanga PasaMalar....

    Thanks for your visit after a quite some time.

    Ungal rasanai thervu pramatham...

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar