Friday, February 1, 2008

சபை வணக்கம்...


அனைவருக்கும் இனிய வணக்கம்.


எந்த எதிர்பார்ப்பும் இன்றி தினம் தினம் சிரிப்போடு மலர்கின்ற மலர்களை, எப்படி நாம் ஊன்றி கவனிப்பதில்லையோ அதைப்போலவே நம் எண்ணத்தில் எழும் பல சிந்தனை ஓட்டங்களையும் நாம் உற்றுக் கவனிப்பதில்லை. எழுதத்துவங்கினால் மட்டுமே நமக்கும் எழுத வருமா வராதா என்கிற உண்மை புரியும். நேரமில்லை என்கிற வறட்டு வார்த்தைகளினால் பயனேதுமில்லை. சரி ஒரு கை பார்த்துவிடலாம் - நமக்கு எழுதவந்தால் நல்லது. சரிவர வரவி்ல்லையென்றால் அதுவும் நல்லது - நம்மைப்பற்றிய புரிதலுக்கு உதவுமே.


கல்லூரி காலத்தில் இருந்த ஆர்வம் இப்போது சற்று மட்டுப்பட்டிருப்பது உண்மைதான் எனினும், இப்போது எழுதுகையில் வார்த்தைகள் இன்னும் வலிமையோடு வரும் என்பதில் உறுதியுள்ளது.


ஏதேனும் கருத்து மாறுபாடுகளோ, வாழ்த்துக்களோ, வருத்தங்களோ எதுவாக இருந்தாலும் பதியுங்கள். அது நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.


இன்று முதல் என்னையும் இந்த வலையுலக வட்டத்திற்குள் இணைத்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.


உங்கள் இதயங்களில் இடம் கொடுங்கள் என்று அன்போடு வேண்டுகிறேன். (இதில் அரசியல் ஏதுமில்லை!!!)நம்பிக்கையுடன்,

நித்யகுமாரன்


18 comments:

 1. Hai da...

  verygood attempt. All the best.

  ReplyDelete
 2. நன்றி திரு. சரவணன் அவர்களே...

  ReplyDelete
 3. //உங்கள் இதயங்களில் இடம் கொடுங்கள் என்று அன்போடு வேண்டுகிறேன். (இதில் அரசியல் ஏதுமில்லை!!!)//
  அட என்னங்க நித்யன்.. எலெக்ஷன்ல சீட்டு கேட்டாலே இதயத்துல இடம் குடுத்து அசத்தற மறத் தமிழர்கள் நாம. நீங்க வேற அரசியல் எதும் இல்லைனு சொல்லிட்டிங்க. அப்புறம் என்ன இதயத்துல எத்தன ஏக்கர் வேணும்னாலும் எடுத்துக்கோங்க. உங்களுக்கு இல்லாததா?

  மேலும் மேலும் மொக்கையிலும் கும்மியிலும் கலக்க வாழ்த்துக்கள். சீரியஸா எதும் எழுதி பயமுறுத்தாம இருந்தா சரி. எங்களுக்கு தெரிந்தது எல்ல்லம் மொக்கம், கும்மி மட்டும் தான் :P

  ReplyDelete
 4. அன்பு நண்பரே வலைப்பதிவுலகத்திற்கு உங்களை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  உங்களின் ஒரு சில பின்னூட்டங்களை படித்ததில் உங்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

  நிறைய எதிர்ப்பார்க்கிறோம்.

  நல்ல தரமான படைப்புகளை உருவாக்கி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
  மஞ்சூர் ராசா
  http://groups.google.com/group/muththamiz

  ReplyDelete
 5. இனிய நண்பர் மஞ்சூர் ராசாவுக்கு,

  வணக்கம். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட விழைகிறேன்.

  என்றும் உங்கள் அன்பை எதிர்நோக்கும்...

  நித்யகுமாரன்.

  ReplyDelete
 6. வாங்க வாங்க உங்களை வலையுலகம் வருக வருக என்று அன்போடு வரவேற்கிறது!!!
  அன்புடன் அருணா

  ReplyDelete
 7. நல்வரவு நல்கிய பாசமலருக்கும், அன்போடு வரவேற்கிற அருணாவுக்கும் என் உளங்கனிந்த நன்றிகள்...

  ReplyDelete
 8. இனிய நண்பர் sanjai அவர்களுக்கு...

  உங்கள் வலையைப் படித்துக்கொண்டே உங்களுக்கு நன்றி பாராட்ட மறந்து விட்டேன். உங்களின் இதயத்தில் ஏக்கர் கணக்கில் இடம் ஒதுக்க முன்வந்ததற்கு நன்றி... இரண்டு ஏக்கர் போதும்...( பிற்பாடு இடம் இல்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது...)

  :-)

  ReplyDelete
 9. தொடர்ந்து எழுதுங்க நித்யகுமாரன்....வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 10. தோழி திவ்யாவிற்கு...

  மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் என் எழுத்துக்களை மேலும் செழுமைப்படுத்த உதவும் தூண்டுகோலாக அமைகின்றன.

  ReplyDelete
 11. உங்கள் இதயங்களில் இடம் கொடுங்கள் என்று அன்போடு வேண்டுகிறேன். (இதில் அரசியல் ஏதுமில்லை!!!)
  Nidhya.. good gesture..ok
  அட என்னங்க நித்யன்.. எலெக்ஷன்ல சீட்டு கேட்டாலே இதயத்துல இடம் குடுத்து அசத்தற மறத் தமிழர்கள் நாம. நீங்க வேற அரசியல் எதும் இல்லைனு சொல்லிட்டிங்க. அப்புறம் என்ன இதயத்துல எத்தன ஏக்கர் வேணும்னாலும் எடுத்துக்கோங்க. உங்களுக்கு இல்லாததா?
  Sanjai.... what a broad mind you have... nidhya enna veedu katti kudi irukkava kekirar acre kanakkil kodukka..(yes..yes.. nidhya construct panneenalum pannuvar.. as he is in the construction field )- so he states that 2 acre is enought for him.
  enna sanjai avarkalae ippadi nanparkalukkellam iadyathil idam kodutthal nanbikal enku povaarkal - paaka pirivinai?

  hi...nidh.. idhayathil idam kettu romba touch pannitinga.. namakkelam acre enta alavukol illai.. vaanatthai pola virinthu paranthu irukirathu...nidh...vai pola nalla manam padaithavarkalukku niraiyave undu.. pertukollathaan aal illai... ilavasam entaalae..mathippu irukkathu...bye nidh

  ReplyDelete
 12. வாங்க...வாங்க! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 13. வலையுலக வட்டத்திற்குள் வருக வருக நித்யகுமாரன்.

  ReplyDelete
 14. தென்றல், சுல்தான்...

  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 15. unmaia sonna padika romba nalla iruku. but officela irundu kondu enaal fulla padika mudiala. aanaal sellaraikal ennai megavum padika tundudhu

  ReplyDelete
 16. poriaalara iruka ungalukul inda pudia vadivam mei selirka vaikudu
  muthukumar
  dubai

  ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar