
வணங்குகிறேன் உன்னை...
உன் விஸ்வரூபத்தின் முன்னால்
மிகவும் எளியவனாய் நானிருக்கிறேன்...
மழையாய் வந்து குளிர்வி்த்து செல்கிறாய்...
சுனாமியாய் வந்து விழுங்கியும் செல்கிறாய்...
விழுதுகளால் ஊஞ்சல் கட்டியும் தருகிறாய்...
வேர்களாய் மறைந்து மறைந்தும் போகிறாய்...
ஒளி தந்து வாழ்க்கைப் பாதை காட்டுகிறாய்...
வெப்பமேற்றி மோகத்தீயில் வாட்டுகிறாய்...
தென்றலாய் வந்து தாலாட்டுவதும் நீயே...
சூறாவளியாய் வந்து சுருட்டுவதும் நீயே...
நாளெல்லாம் பரவசப்படுத்துவதும் நீதான்...
நொடிப்பொழுதில் கலவரப்படுத்துவதும் நீதான்...
வயிறுவலிக்க சிரிக்கவைப்பதும் நீதான்...
கண்ணீர் வற்ற அழவைப்பதும் நீதான்...
கடந்தவாரம் கடவுளைக் கூட பார்த்துக் கேட்டேன்...
அவனும் கூட புலம்பிவிட்டுத்தான் போகிறான்...
உன் விஷயம் தெரியாமல்
விஸ்ரூபம் புரியாமல்
கண்ணை மூடி காதலித்துவரும்
அத்துனை பேரையும்
இமை மூடி காத்துவருகிறாய்...
ஆதி அந்தம் புரியாத இறையே...
உனை வணங்குகிறேன்...
போகும் வழியில் அவளைப் பார்த்தால்
சொல்லிவிட்டுப் போ...
“போடி போ... அங்கொருவன்
விழியிரண்டை வீதியில் விட்டு விட்டு
வீட்டுக்குள் குருடனாயிருக்கிறான்...”
கடந்தவாரம் கடவுளைக் கூட பார்த்துக் கேட்டேன்...
ReplyDeleteஅவனும் கூட புலம்பிவிட்டுத்தான் போகிறான்...
உன் விஷயம் தெரியாமல்
விஸ்ரூபம் புரியாமல்
கண்ணை மூடி காதலித்துவரும்
அத்துனை பேரையும்
இமை மூடி காத்துவருகிறாய்...
ஆதி அந்தம் புரியாத இறையே...
உனை வணங்குகிறேன்...
போகும் வழியில் அவளைப் பார்த்தால்
சொல்லிவிட்டுப் போ...
“போடி போ... அங்கொருவன்
விழியிரண்டை வீதியில் விட்டு விட்டு
வீட்டுக்குள் குருடனாயிருக்கிறான்...”
en idhayatthai ooduruviya varikal
vali, valiyin valiyai puriyimoh
Andrew
நண்பர் ஆண்ட்ரூவுக்கு நன்றி...
ReplyDeleteஇங்கு காதலே காதலைப்புரியாமல் செல்லும்போது, வலி, வலியின் வலியையா புரிந்து கொள்ளப்போகிறது...
kaathalae kaathalai puriyamal.....
ReplyDeletekaathalai purinthu kollaathathaal thaan avanidathil kaathal punithamai ponathu...athan valithan intha pulambal.. pulambalil kaathal vazhkirathoh
andr