
மூன்று ரூபாய்க்கு ஆனந்தவிகடன் விற்ற காலத்திலிருந்து, விகடன் வாசித்து வருகிறேன். அவ்வப்போது விகடனின் தோற்றம் மற்றும் உள்ளீடு மாறும். ஒவ்வொரு மாற்றமும் முன்பில்லாத அளவுக்கு இதழை பொலிவுபடுத்தியே வைத்திருந்தது என்பதில் ஐயமில்லை. புத்தம்புதிய பகுதிகள், பரீட்சார்த்த முயற்சிகள் என விகடனின் அனைத்து அவதாரங்களும் பெரிதும் மகிழ்ந்து கொண்டாடப்பட்டவையே. மதன், சுஜாதா, வைரமுத்து ஆகியோரின் பங்கு மிகவும் சிறப்பாக இருந்த நேரத்தில் மற்ற பகுதிகளும் இவற்றிற்கு இணையாக வரவேண்டுமென்று மிக சிரத்தையோடு எழுதப்பட்டன. விகடனின் ஜோக்குகளுக்கென்று இன்றும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றதென்பது உண்மை.
விகடனிலிருந்து மதன் விலகியதும், சீனிவாசன் பொறுப்பேற்றதும் மிக முக்கியமான நிகழ்வுகளாக நான் பார்க்கிறேன். ஆயினும் மதன் விலகியதை மிகவும் நாகரிகமாக பாலசுப்ரமணியன் கையாண்டார். அவருடைய “வணக்கம்” கட்டுரை விகடனின் வாசகர்களின் மனதில் இன்றும் நிற்கிறது. அந்த நிகழ்விற்கு பின்னர் மதன் “விண் நாயகன்” எனும் இதழைத்தொடங்கி (“இந்தியா டுடே” சைஸில்) நடத்த, அந்த பத்திரிகையைப்பற்றி குமுதம் அரசு பதில்களில் “எழுந்து நின்று பாராட்டி வரவேற்பதாக” எழுதப்பட்டது. ஆயினும் அந்த இதழ் சொற்ப நாட்களில் நின்றுபோயிற்று. இவை நடந்து கொண்டிருந்தபோதிலும் மதன் தன் “ஹாய் மதன்” பகுதியை நிறுத்தாமல் விகடனில் எழுதிக்கொண்டுதானிருந்தார். மதன் விகடனிலிருந்து விலகிய சூட்டோடு குமுதத்தில்கூட ஒரு கட்டுரைத்தொடர் எழுதினார் (பெயர் நினைவிலில்லை).
விகடனில், தலையங்கம் மற்றும் கார்ட்டூன் இரண்டு பக்கங்களில் வரும். சில காலம் மதனின் கார்ட்டூன் இல்லாமலேயே விகடன் வந்ததாகக்கூட நினைவு. பின்பு ஹரனின் கார்ட்டூன்கள் முழுப்பக்க அளவில் ஆசிரியரின் ஒரு பக்க கடிதத்தோடு வரத்துவங்கின. இது கிட்டத்தட்ட இரண்டாவது தலையங்கம் மற்றும் இரண்டாவது முழுப்பக்க கார்ட்டூனாகவே அமைந்தது. மதனை முழுமையாக விலக்கிவிட இயலாத தன்மையாலோ, அடுத்த ஸ்டெப்னி போன்று ஹரனை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற உந்துதலினாலோ இது நடந்திருக்கலாம். இது விகடனின் ஆசிரியர் குழுவின் முடிவாக இருக்கலாம். அது நமக்குத் தேவையில்லை. ஆயினும் கார்ட்டூன் ஸ்பெஷலிஸ்ட்டாக விகடன் கொண்டாடிய மதன் இருக்கையிலேயே, இன்னொருவரின் முழுப்பக்க கார்ட்டூனை தொடர்ந்து வெளியிடுவது மதனுக்கு எப்படிவொரு அசூசையான உணர்வைக் கொடுத்திருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தார்களா என்று தெரியவில்லை.
ஹாய் மதனும் இப்போது நான்கு பக்கங்களில் வருவதில், இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் புகைப்படங்கள் (பெரும்பாலும் கவர்ச்சிப் படங்கள்) எடுத்துக்கொள்கின்றன. கல்லூரிக்காலத்தில் மதனுக்கு கேள்வி எழுதிப்போட்டு விகடனை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த வாசகன்தான் நான். இப்போது இந்நிலையைப் பார்க்கையில் வருத்தமாகத்தான் இருக்கிறது.
மேலும் சமீபத்திய ஞாநி மற்றும் ஜெயமோகன் விவகாரங்களில், ஆனந்த விகடனின் நிலைப்பாட்டினை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது இப்படித்தான், இவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று ஆனந்தவிகடனையும் அதே தட்டில் வைத்து அளந்து பார்த்துவிட முடியவில்லை. ஆனந்தவிகடனின் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையோ அல்லது ஆனந்தவிகடன் என் மீது செம்மைப்படுத்தியிருந்த நம்பிக்கையோ தான் என்னுடைய இந்த சிந்தனைக்குக்காரணம் என்று நினைக்கிறேன்.
மேலும் சமீபத்திய ஆனந்தவிகடனின் கவர்ஸ்டோரிகளும் யூகத்திலான விஷயங்களைக்கொண்டே எழுதப்படுகின்றன. உதாரணம் 1 - “ஷங்கர் இயக்கத்தில் ரோபோவில் அஜீத் தான் நடிக்கிறார் - பேசி விட்டார்கள் - அந்த வட்டாரம் சொல்கிறது - கோடம்பாக்கம் பற்றிக்கொண்டு திகுதிகு வென்று எரிகிறது” - என்கிற ரீதியில் ஒரு அட்டைப்படக் கட்டுரை பரபரப்பாக வெளியானது. மற்ற பத்திரிகைகளில் வராத ஒரு விஷயத்தை தான் முந்தித் தந்து விட்டோம் என்று பறைசாற்றத்தான் இந்த அட்டைப்பட கட்டுரை. ஆனால் நடந்த கதையோ வேறு.
சமீபத்திய விகடனின் அட்டைப்படக் கட்டுரையும் ( “வயசுக்குத் தகுந்த வேஷம்தான் போடணும்!” - அமிதாப் வழியில் ரஜினி) யூகங்களைக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது. தலைப்பில் சொல்லப்பட்ட விஷயத்தைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் பேசாத நிலையிலும் கிராபிக்ஸ் செய்யப்பட்ட இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. விகடன் ஆசிரியர் குழு நம்முடைய தமிழ் ப்ளாக்குகளை சமீபகாலமாக படிக்க ஆரம்பித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கவர்ச்சியான தலைப்பு வைத்து விட்டு அதைப்பற்றி பேசாமல் எழுதப்படும் பதிவுகளின் பாதிப்பாகத்தான் இந்த கட்டுரை வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.
ஆனந்தவிகடனின் தரம் இறங்கி வந்திருப்பதாகவே என் எண்ணத்தில் தோன்றுகிறது. இனியும் என்னால் முன்பு போல ஆவலாவலாக விகடனைத் தேடிப் பிடித்து வாங்கி வரி விடாமல் ஒவ்வொரு படைப்பையும் படிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். இதை எழுதுகையில் கூட ஒரு சொல்லமுடியாத வலியை உணர்கிறேன்.
i agree with your comments on anandha vikatan . I am also reading anandha vikatan from my childhood . Nowadays it becomes a book which creates only interest to buy .But nothing it has inside . Even in my collage days i except the thurday to buy anadha vikatan . But it all gone now..
ReplyDeleteBy
Ignatius Rassal
i agree with you
ReplyDeletei'm reading vikadan from 1975
but now i stop much reading
i bleave more support DMK politic
now. maybe they sold partof vikadan serculation for karunanithy
family.
jeva
I too agree with you.
ReplyDeleteI too agree with you. You have written what I felt
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவிகடனின் போக்கு பல வருடங்களுக்கு முன்பே தெரிந்தது தான்
நான் 1972 இல் இருந்து வாசிக்கிறேன்.
மதன் மனித குலத்தின் ஆரம்ப வரலாறு பற்றி குமுதத்தில் எழுதினார்
ReplyDeleteIgnatius Rassal,
ReplyDeleteJeva,
Thiyagarajan,
Raams
உங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
உங்கள் கருத்துக்களை இங்கு பதிந்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்...
மிக்க நன்றி...
அன்பு அருண்மொழிக்கு...
ReplyDeleteபுதிதாக ப்ளாக் எழுத வந்திருக்கும் உங்களை என் வலைப்பதிவுக்கும், வலையுலகிற்கும் வரவேற்கிறேன். உங்கள் நோக்கம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
உங்களின் தகவலுக்கு நன்றி...
அன்பு நித்யகுமாரன்
உண்மைதான். ஆனந்தவிகடன் தரம் தாழ்ந்து விட்டதோ என்ற சந்தேகம் எனக்கும்.
ReplyDeleteபுத்தகத்தின் அளவு கூட சுருங்கி விட்டது. விளம்பரங்களும் நிறைய வருகிறது. சினிமா செய்திகளுக்கு முன்னை விட அதிக முக்கியத்துவம் தரபடுகிறது.
வால்பையன்
சினிமா அக்கப்போர் அதிகமாக வெளிவருகிறது. :(
ReplyDeleteவால்பையனுக்கும் , பொன்வண்டுக்கும் வணக்கம்.
ReplyDeleteநீங்கள் சொல்லியிருக்கும்படி சினிமா செய்திகள் இப்போது அதிக இடம் பிடிக்கின்றன...
உங்கள் பதிவிற்கு நெஞ்சார்ந்த நன்றி...
அன்பு நித்யகுமாரன்
//ஓட்டைப்பையிலிருந்து சில சில்லறைகள்... //
ReplyDeleteதைக்க வேண்டியது தானேய்யா!
டமிழச்சி
வணக்கம் நித்ய குமாரன். விகடனின் 26வருட வாசகனான நான் இப்போது எண்ணிப்பார்க்கையில் எப்படி இருந்த பத்திரிக்கை இப்படி ஆகிவிட்டதே என்று மன வருத்தமாக தான் இருக்கிறது.
ReplyDeleteஒவ்வொரு வாரமும் பத்திரிக்கை வரும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பேன். அது ஒரு காலம். விகடனின் இத்தனை வருட அனுபவத்திற்கும், தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியிலும் இந்நேரம் அது உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இப்போது கற்றுக்குட்டி (Amateur) பத்திரிக்கை போன்றே உள்ளது. அதன் கட்டுரைகளும் அவ்வாறே உள்ளன. நீங்கள் சொன்னது போல்
//( “வயசுக்குத் தகுந்த வேஷம்தான் போடணும்!” - அமிதாப் வழியில் ரஜினி) யூகங்களைக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறதுதலைப்பில் சொல்லப்பட்ட விஷயத்தைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் பேசாத நிலையிலும் கிராபிக்ஸ் செய்யப்பட்ட இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.//
கற்றுக்குட்டி தனமான அந்த கிராபிக்ஸ் பார்த்து நன்றாக சிரித்தேன். இதை எல்லாம் ஒரு விஷயமாக எடுத்து கொண்டு இரண்டு பக்கங்களை வீணாக்குகிறார்கள்.
தேவையான சினிமா செய்திகளை கண்டிப்பாக உபயோகிக்கலாம். தேவையே இல்லாத கண்டவர்களின் bio-data, அவர்களின் சொந்த வாழ்க்கை இது தேவையா?
அப்புறம் விகடன் சினிமா விமர்சனம். அது இப்போது ஒரு கொடுமை. இன்னமும் திரைப்படம் என்றால் கதை மற்றும் கதை பாத்திரங்கள் தான் முக்கியம், அதை வைத்து தான் விமர்சனம் செய்ய வேண்டும் என்ற முறை இன்றி நடிகர்களின் பெயர் வைத்து தான் கதை விமர்சனம் செய்யப்படுகிறது. இப்போதெல்லாம் ஒரு வாரத்தில் உலக சினிமா மற்றும் ஒன்றோ இரண்டோ கட்டுரைகள் தான் தேறுகின்றன. குமுதமே இப்பொழுது பரவாயில்லை போலிருக்கிறது.
நண்பர் பிரேம்ஜி...
ReplyDeleteவணக்கம். உங்களின் மன அழுத்தங்களை வெளியிட இப்பதிவு ஒரு வழியாக அமைந்தது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி.
உங்களின் கருத்துக்களை நான் வழிமொழிகின்றேன்.
சமீபத்திய விகடனில் வெளியாகியிருக்கும் மல்லிகா ஷெராவத்தின் முழுப்பக்க கவர்ச்சிப்படம் விகடனின் தரத்துக்கு சற்றும் பொறுத்தமில்லை. விகடனார் நிச்சயமாக வருத்தப்படுவார்.
நித்யகுமாரன்
இந்த பதிவினை சூடான இடுகைகளில் இட்டு, குன்றின் மேலிட்ட விளக்காக பிரகாசப்படுத்திய தமிழ்மணம் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteமுதன்முறையாக சூடான இடுகைகளில் இடம்பெறுவதால் இந்த உணர்ச்சிவயப்படல் இருக்கலாமென்று எண்ணுகிறேன்.
புதிய பதிவனை அங்கீகரிக்கும் தமிழ் மணத்திற்கு நன்றிகள் பல...
நித்யகுமாரன்
இந்த பதிவினை சூடான இடுகைகளில் இட்டு, குன்றின் மேலிட்ட விளக்காக பிரகாசப்படுத்திய தமிழ்மணம் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteமுதன்முறையாக சூடான இடுகைகளில் இடம்பெறுவதால் இந்த உணர்ச்சிவயப்படல் இருக்கலாமென்று எண்ணுகிறேன்.
புதிய பதிவனை அங்கீகரிக்கும் தமிழ் மணத்திற்கு நன்றிகள் பல...
நித்யகுமாரன்
போனவருசம் முதல் விகடனுக்கு சந்தா கட்டுவதை நிறுத்திட்டேன்.
ReplyDeleteமுக்காலே மூணுவீசம் சினிமா & அரசியல். சீன்னு போச்சு.
அட்டையைக் கிழிச்சுட்டா...இப்ப வரும் குமுதம், விகடன், குங்குமம் இன்னபிற எல்லாம் ஒண்ணுதான்.
கல்கியைப் பாருங்க தேசலா இருக்கு.
இனி நம்ம வாசிப்பு இங்கே வலையில் அதுவும் தமிழ்மணத்தில்தான்னு முடிவு செஞ்சுகிட்டேன்.
நல்ல பதிவுதான்.
விகடனில் விகடம்,விஷ்யம் எல்லாம் இருந்த காலம் போய் விஷமம்,விபச்சாரம் எல்லாம் வந்து விட்டது.
ReplyDeleteஅண்மையில் இணையத்தில் வந்தது என்று பெரியார்,சிவாஜி கணேசன் போன்றோரைப் பற்றி எழுதியிருந்தது அசிங்கம்.
விகடனை ஆரம்பித்த சீனுவாசன் பெரியாரின் குடிஅரசு பத்திரிக்கை விற்பனையில் வேலை செய்தவர்.
அவர் விகடன் ஆரம்பித்த போது பெரியார் ஊக்கமும் பண உதவியுஞ் செய்தார்.வாசன் அவர்கள் மிக்க நன்றியுடன் ஆண்டு தோரும் சந்தித்து
நன்றி தெரிவித்தார்.
பேரன் சீனுவாசன் நன்றி தெரிவிக்க வேண்டியதில்லை.எதிர்த்தும் எழுதலாம்.தரந்தாழ்ந்திடக் கூடாது. அவ்வளவு தான்.
ஆனந்த விகடன் நாலணாவுக்கு விற்ற காலத்திலிருந்தே நான் படிக்கிறேன். அப்போது வந்த கதைகள்,ஜோக்குகள், கோபுலுவின் சித்திரங்கள் அழகாக இருக்கும்.
ReplyDeleteஅந்நாளில் தொடர்கதைகளை எல்லாம் சேர்த்து வைத்திருந்து புத்தகமாக பைண்ட் செய்து வைத்திருப்பேன். தில்லானா மோகனாம்பாள் கதையை சேர்த்து அதை இரண்டு வால்யூமாக பைண்ட் செய்தேன்
முன்னெல்லாம் டிவி கிடையாது, ஃஎப் எம் ரேடியோ கிடையாது. அகில இந்திய வானொலியில் சங்கீதம் கேட்டோம். தினசரிகளில் செய்தி படித்தோம். தியேட்டரில் போய் தான் சினிமா பார்த்தோம். லைப்ரரி சென்று புத்தகம் எடுத்து படித்தோம்.
நாம் மாறிவிட வில்லையா? நமக்கு ஏற்ற படி எல்லாம் மாறும்.
என்ன செய்ய?
சகாதேவன்
I agree with you in toto.
ReplyDeleteVikatan is subscribing to gossips and resorting to cheap commercial strategies to 'retain' its circulation. It is not worth reading.
I have stopped from purchasing. I have not lost anything.
S. Krishnamoorthy
//ஆனந்தவிகடன் தரம் தாழ்ந்து விட்டதோ என்ற சந்தேகம் எனக்கும்.
ReplyDeleteபுத்தகத்தின் அளவு கூட சுருங்கி விட்டது.//
எல்லாம் அந்த சினிவாசனின் கைங்கரியம் தான்...பாலு இருந்த போதே தேவலை...
கழுதை தேஞ்சு கட்டெரும்பு...
துளசி கோபால்...
ReplyDeleteநறுக்குத்தெரித்தாற்போன்ற உங்களின் விமரிசனம், விகடன் விமரிசனக்குழுவின் வார்த்தைகளை விட மிகவும் கூர்மையாக இருக்கிறது...
மிக்க நன்றி
தமிழன்...
ReplyDeleteஉங்கள் பார்வையில் விகடன் குறித்து மிகுந்த கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் அடிப்படையில் விகடன் மீதான உங்களின் அன்பின் விளைவாகவே அது வெளிப்பட்டிருக்கிறது. நமக்கு மிக நெருக்கமான நண்பர்கள் தவறிழைக்கும் போது ஏற்படுகின்ற வருத்தம் கலந்த கோபம்தான் அது.
உங்கள் எண்ணங்களை பதிந்தமைக்கு மிக்க நன்றி...
சகாதேவன்...
ReplyDeleteமிகவும் இயல்பாக கால மாறுபாட்டின் வெளிப்பாடாக விகடனும் மாறியிருப்பதாக தங்கள் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். ஆயினும் திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் விகடனை கட்டிக்காத்தபோது அவர் வாசகர்களிடம் ஏற்படுத்தியிருந்த ஓர் அற்புதமான உறவு தற்போது அழிந்து வருவதாக உணர்வதன் பதிவுதான் இந்த இடுகை.
உங்களின் மிக்க இயல்பான வார்த்தைகளுக்கு நன்றி
Mr. S. Krishnamoorthy...
ReplyDeleteYour words are straight from your heart. You lost nothing, though you parted away from vikatan. Your whole hearted decision about vikatan is really an alarm sign for vikatan group.
திரு. சீனு...
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. விகடனின் பொறுப்பாளர்களின் பெயர்களை குறிப்பிடுகையில் இன்னும் சற்று மரியாதையாகக் குறிப்பிடலாமே... உங்களை காயப்படுத்த இப்படி எழுதவில்லை. நமக்கு திரு. சீனிவாசன் மீதோ அல்லது திரு. பாலசுப்ரமணியன் மீதோ வருத்தம் இல்லை. நம்முடைய வருத்தமெல்லாம் விகடனாரின் இன்றைய நிலையை எண்ணித்தான்...
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
விகடன் "குமுதம்"ஆகி விட்டது.
ReplyDeleteகுமுதம் "குங்குமம்"ஆகி விட்டது.
குங்குமம் "நக்கீரன்"ஆகி விட்டது.
காலம் செய்த கோலமடி....
//விகடன் "குமுதம்"ஆகி விட்டது.
ReplyDeleteகுமுதம் "குங்குமம்"ஆகி விட்டது.
குங்குமம் "நக்கீரன்"ஆகி விட்டது.
காலம் செய்த கோலமடி....//
நெத்தியடி.....
வியாபாரப் போக்கில் போகும் உலகில் விகடனும் போவது வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்.
ReplyDeleteமிகச் சரியான கருத்து. விகடனில் இனிமேலாவது கவனிப்பார்களா?
ReplyDelete//
ReplyDeleteபாச மலர் said...
வியாபாரப் போக்கில் போகும் உலகில் விகடனும் போவது வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்.
//
வாங்க பாசமலர்...
நீங்க வருவீங்கன்னு எதிர்பாத்துட்டே இருந்தேன். உங்கள் கருத்தையும் பதிந்தமைக்கு நன்றி...
அன்பு நித்யகுமாரன்
//
ReplyDeleteBee'morgan said...
மிகச் சரியான கருத்து. விகடனில் இனிமேலாவது கவனிப்பார்களா?
//
பார்க்கலாம் நண்பரே...
உங்களின் பார்வைக்கு நன்றி...