Saturday, February 9, 2008

இது முத்தக்காலம்...


உனக்கான வார்த்தைகளை
சேர்த்து வைத்து சேர்த்து வைத்து
சுமக்க முடியாமல் தடுமாறுகிறேன்...

உனக்கான முத்தங்களையெல்லாம்
எப்படி சேகரம் செய்வதென்று
புரியாமல் தடுமாறுகிறேன்...

வார்த்தைகள்
தாமதமாய் வந்தாலும்
அதன் தரம் மறையாது...

ஆனால்
முத்தங்கள் அப்படியா...

ஈரம் காய்வதற்குள்
வாங்கிக்கொள்ள வேண்டாமா...

எத்தனை முறைதான்
ஈரப்படுத்தித் தயார்நிலையில்
வைத்திருப்பதென் உதடுகளை...

உதடுகளும் முத்தங்களும்
மாறி மாறி கேலி செய்கின்றன...

இனி மொத்த காலமும் முத்தக்காலமே...

விரைந்து வா அன்பே...

6 comments:

  1. முத்த சேகரிப்பு குறும்பு..
    ரசித்தேன் வரிகளை!!!

    ReplyDelete
  2. seekiram mutham kidaikka valthukkal :)

    ReplyDelete
  3. இரசிகா & dreams...

    உங்கள் வாசிப்புக்கும், நேசிப்புக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  4. முத்தத்தை எப்படி சேகரித்து வைத்துக்கொள்வது? எனக்கு பல நாட்டு பணம், காயின்ஸ் சேகரிக்கும் பழக்கம் உண்டு அது போல.............

    ச்சே முத்தத்தை எப்படி சேகரிப்பது என்று கேட்கவந்தேன் தப்பா நினைக்காதீங்க:)))

    ReplyDelete
  5. எத்தனை முறைதான்
    ஈரப்படுத்தித் தயார்நிலையில்
    வைத்திருப்பதென் உதடுகளை...

    enna ippadi varunthukireerkal

    paaka azhagagathanae irukireerkal

    aala illai eeeram kaayum mun peruvatharkku

    kodukka neengathaan thayaraga villai

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar