Saturday, February 2, 2008

இந்திரலோகத்தில் நா.அழகப்பன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி


நேற்று நடந்த இரண்டு நிகழ்வுகளில் இருந்த ஓர் ஒற்றுமை என்னை வியப்பில் ஆழ்த்தியது.

20 - 20 உலக சாம்பியன் இந்திய அணியும், இதுவரை இந்தியாவிடம் 20 - 20 போட்டிகளில் தோல்வியடைந்தே வந்த ஆஸ்திரேலிய அணியும் ஒரே ஒரு 20 - 20 போட்டியில் மோதின.

“இம்சைஅரசன் 23-ம் புலிகேசி” - என்ற வெற்றிப்படத்தை தந்து, அதே பாதையில் இரண்டாவது முறையாக கதாநாயகன் வேடம் தரித்து வடிவேலு நடித்த “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்” படம் வெளியானது.

இரண்டு நிகழ்வுகளின் முடிவுகளும் எதிர்பார்க்காதவையாக இருந்தன.

ஹர்பஜன்சிங் வழக்கில் கிடைத்த எதிர்பாராத முடிவிற்கும், இதுவரை இந்தியாவை வெல்ல முடியாமல் இருந்த கடுப்பிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் வஞ்சம் தீர்த்துக் கொண்டனர். இந்திய அணி வென்றுவிடலாம் என்ற அதீத நம்பி்க்கையில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சேவாக் விக்கெட் வீழ்ந்தபிறகு, அணியை வழிநடத்தி செல்லும் ஆட்டம் வழங்க அனுபவ வீரர்கள் யாரும் இல்லை. இந்த அணிதான் கோப்பையை கைப்பற்றியதா என்ற வினா எழுந்தது உண்மைதான். தோனி உள்ளிட்ட வீரர்கள் சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காத நிலையில், அணியை தங்கள் கட்டுக்கோப்பில் வைத்திருக்க தடுமாறியிருக்கலாம். யுவராஜ் இருந்திருந்தாலும் என்ன செய்திருப்பார் என்பதும் கேள்விக்குறிதான். பதான் மட்டும் இரட்டை இலக்க எண் ஓட்டங்கள் எடுத்தார் என்பது மிகவும் கேவலமான நிலையில் இந்திய பேட்டிங் உள்ளதை உலகிற்கு எடுத்துக்காட்டியது.

அடுத்து வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எவ்வளவு தடுமாறப்போகிறது என்பதை நினைத்தால் இப்போதே பயமாக இருக்கிறது. இந்த முறை இறுதி ஆட்டத்தை இந்திய வீரர்கள் பெவிலியனில் அமர்ந்துதான் பார்க்கப்போகிறார்கள் என்று பட்சி சொல்கிறது. பார்க்கலாம்.

இப்படி ஒரு மேட்சிற்கு பிறகு, மனம் நொந்த நிலையில் நம்ம வடிவேலு நடித்த படம் வெளியாகியிருக்கிறதே, அதைப்பார்த்து மனதை தேற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து நண்பர் ராகவனும், நானும் மாயாஜால் செல்ல முடிவெடுத்தோம். மாயாஜால் வலைத்தளத்தில் சென்று பார்த்தால், இரவு 8-30 காட்சிக்கு முன்பக்க ரோவில் மட்டுமே இடம் இருந்தது. நேரில் சென்று பார்க்கலாம், யாரேனும் நண்பர்கள் வராத போது எந்த புண்ணியவானேனும் டிக்கெட்டுகளை விற்கலாம், பின்பக்க ரோவில் அமர வாய்ப்பு கிடைக்கும் என்றெண்ணி கிளம்பி விட்டோம். அப்போது எங்களுக்கு தெரியவில்லை நாங்கள் எப்படி மாட்டப் போகிறோம் என்று... (இது ராஜேஸ்குமார் ஸ்டைல்)

நினைத்தபடியே சற்று பின்புறமாக இரண்டு டிக்கெட்டுகள் கிடைத்தன. படம் ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே நெளியத்தொடங்கி விட்டோம். மடமடவென விக்கெட்டுகள் விழுந்த இந்திய அணிபோல படம் தொய்யத்தொடங்கியது. இடைவேளை வரும் வரைக்கே போதும் போதும் என்றாகிவிட்டது. அதன்பிறகும் படம் சூடுபிடிக்கவில்லை. படத்தைப்பற்றி எழுதும் அளவுக்கு படத்தில் ஏதுமில்லை, அந்த பிரமாண்ட அரங்குகளைத்தவிர... யமலோகம் அரங்க நிர்மாணம் பிரமாதம். அவ்வப்போது சிரிப்பலைகளை எழுப்பியதைத்தவிர படம் பெரிதாக ஏதும் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. ஸ்ரேயா அய்யோ பாவம். படம் முழுக்க வயிறைக் காட்டிக்கொண்டு வரும் அந்த ரம்பையும் (கதாநாயகியாம்) அந்தோ பரிதாபம். நாசர் நிலைமை - நாராயண நாராயண. நகைச்சுவைத்தோரணங்களாக தெரியும் படியான காட்சியமைப்புளும், கடைசிவரை வேகமெடுக்காத திரைக்கதையும் நம்மை மிகவும் சோர்வடையச் செய்கின்றன. உலகத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வரும்போது நேரமிருந்தால் பாருங்கள். இப்போதே பார்ப்பேன் என்று அடம்பிடித்தால் நான் சொல்வதற்கு ஒன்று மட்டுமே உள்ளது. முடியல

ஆகவே அடுத்தமுறை வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் படத்தையோ, இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 20-20 போட்டியையோ முறையே டிவியிலும், ஹைலைட்ஸிலும் பார்ப்பது இருதயம் பலவீனமாக இருப்பவர்களுக்கு மிக மிக நல்லது.

5 comments:

  1. This one very good article you have very good writing skill keep it up

    ReplyDelete
  2. நீங்கள் வலையுலகத்திற்கு புதிது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள், அருமையான எழுத்து நடை.

    நானும் உங்களை போல் படம் பார்த்து நொந்தவன் தான்,
    உங்கள் வருகையையும் எதிர்பார்க்கிறேன்.

    வால்பையன்

    ReplyDelete
  3. நன்றி திரு. நெல்லை காந்த் அவர்களே...

    நன்றி வால்பையன் அவர்களே...

    உங்களுடைய வாழ்த்துக்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றன. மிக்க நன்றி

    ReplyDelete
  4. //இப்படி ஒரு மேட்சிற்கு பிறகு, மனம் நொந்த நிலையில் நம்ம வடிவேலு நடித்த படம் வெளியாகியிருக்கிறதே, அதைப்பார்த்து மனதை தேற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து..//

    கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை தலைய விரிச்சி போட்டு ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம். :P

    இப்படிக்கு
    உங்களைப் போல் நொந்தவன். :(

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar