Saturday, March 8, 2008

வெள்ளித்திரை - திரைப்பார்வை


“மொழி” வெற்றிப்படத்திற்குப் பிறகு, பிரகாஷ் ராஜின் Duet Movies நிறுவனம் Moser baer உடன் இணைந்து தந்திருக்கும் திரைப்படம். படத்தின் தலைப்புப்படி திரைத்துறையைச் சார்ந்து இயங்குகிறது கதை. இன்னும் சிறப்பாக சுவாரஸ்யமாக அமைந்திருக்கலாமோ என்ற கேள்வியுடன் முடிவடைகிறது படம்.

கதாநாயக ஆர்வத்திலிருக்கும் கன்னையாவும் (பிரகாஷ் ராஜ்), இயக்குநர் ஆர்வத்திலிருக்கும் சரவணனும் (பிருத்விராஜ்) நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளமுடியாதபடிக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். சரவணனின் கதையைத்திருடி தன் பெயரில் பதிவு செய்து அந்தக்கதையின் மூலம் கதாநாயகனாகிறான் கன்னையா. முன்னணி கதாநாயகி மைதிலியுடன் (கோபிகா) காதல் கொண்டு, அவள் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டவுடன் அவளை கரம்பிடிக்கிறான் சரவணன். உப்புசப்பில்லாத காரணங்காட்டி மைதிலி சரவணனைப்பிரிய, ரோட்டில் அமர்ந்து புலம்பும் சரவணனுக்கு அந்த பழைய தயாரிப்பாளரே வாய்ப்பு (!) தர, கன்னையனை வைத்தே “பிரம்மா” என்றொரு படம் எடுக்கிறான் சரவணன். நாயக அந்தஸ்தில் இருக்கும் கன்னையன், தன் முன்னால் நண்பனுக்கு முடிந்த அளவு டார்ச்சர் கொடுத்து கடைசியில் கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்கமுடியாதென அடம்பிடித்து கிளம்ப, சரவணன் இயல்பாக நடக்கும்படியாகவே கன்னையன் செயல்படுவதை மறைத்து வைக்கப்பட்ட கேமராக்கள் மூலம் படம்பிடித்து படத்தை முடித்து வெளியிடுகிறான். கன்னையா திருந்த, சரவணன் மைதிலி சேர படம் சுபம்.

மிக ஆர்வமாக படம் பார்க்கப்போன நம்மை நடுமண்டையில் நச்சென அடித்து உட்கார வைக்கிறார்கள். திரைத்துறையைச் சுற்றிச்சுழலும் கதையில் சுவாரஸ்யம், நாம் எதிர்பார்த்த அளவைவிட மிகக் குறைவுதான். பிரகாஷ்ராஜ் தன் பாத்திரத்தில் சிறப்பாக பொருந்துகிறார். 80% சோகம் பூசிக்கொண்டே வரும் கதாபாத்திரத்தில் வரும் பிருத்விராஜ், படம் முழுக்க சந்தோஷமாகவே காணப்படவில்லை. கோபிகா நிலை இன்னும் பாவம். அழுகிறார், அழுகிறார் அழுது கொண்டேயிருக்கிறார்.

கன்னையாவின் பாத்திரம் முற்றிலும் வில்லத்தனமாக அமைந்து தன் குணாதிசியத்தை இறுதியில் இழந்து நம் மனதில் பதிய மறுக்கிறது. ஆரம்பத்தில் மைதிலி மீது மையல் கொண்டு மகிழும் கன்னையா பிறகு பெரிய நட்சத்திரமானபின் மைதிலியின் அண்ணனிடம் அவளை தன்னோடு சேர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவிக்கிறான். இதற்கிடையில் மைதிலி சரவணனிடம் திருமணமாகி தற்காலிகமாக விலகி இருக்கிறாள். அந்த அண்ணனும் எந்த வில்லத்தனமும் செய்யாமல் அவ்வப்போது வந்து மைதிலியை அடிப்பதோடு சரி. ரொம்ப கேட்டால் நமக்கும் நாலு அறை விழும்போல இருக்கிறது.

மைதிலியும் சரவணனும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாகவாவது இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை. மைதிலி சரவணனைப் பிரிவதும் பின்பு இணைவதும், அந்த நிகழ்வுகளை சரவணன் எடுத்துக்கொள்ளும் விதமும் நம் சிற்றறிவிற்கு பொருந்தும்படி இல்லை.

சரத்பாபு, எம்.எஸ். பாஸ்கர், சார்லி போன்றோர் சிறு பாத்திரங்களில் வந்து நிறைவாகச் செய்திருக்கிறார்கள். அவ்வப்போது வந்து ஸ்பீட்பிரேக்கர் போடும் பாடல்கள் மட்டும் நம்மை சற்று ஆசுவாசப்படுத்துகின்றன (சற்று வெளியே செல்லலாமில்லையா...!). ஒரேயொரு சோகப் பாடலைத்தவிர்த்து மற்ற பாடல்களில் சுவாரஸ்யமில்லை. பின்னணி இசை சத்தம் அதிகம்.

இயக்குனராக முதல் படம் செய்யவந்திருக்கும் விஜியின் உழைப்பு இறுதிக்காட்சியில் தெரிகிறது. இறுதிக்காட்சிக்கான திரைக்கதையும் திட்டமிடல்களும் நன்று. வேறொரு கதையை அவர் தேர்வு செய்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுவதை சொல்லாமலிருக்க முடியில்லை.

செலவு செய்ய நிறைய நேரமும் பணமும் வைத்திருப்பவர்கள் தாராளமாகப் பார்க்கலாம். என்னைக் கேட்டால் வீட்டில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்திருப்பதே மதி என்பேன்...!

19 comments:

 1. //வீட்டில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்திருப்பதே மதி என்பேன்\\
  nach comment

  ReplyDelete
 2. மலையாளத்தில் இதே கதை உதயநாணுதாரம் என்ற பெயரில் வெளிவந்தது,அந்த படத்தில் மோகன்லாலின் நடிப்பு நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 3. I think, this is a remake of one malayalam movie starred by Mohanlal...

  ReplyDelete
 4. ஒரு முறை பார்க்கலாமே எப்படித்தான் இருக்கிறது என்று. கையோடு மோகன்லால் நடித்த படத்தையும் பார்க்கவேண்டும்.

  விமர்சனத்திற்கு நன்றி.

  ReplyDelete
 5. முரளி கண்ணன்...

  படம் பார்த்தீர்களாவென்று தெரியவில்லை. என் பார்வையில் பட்டதை எழுதியிருக்கிறேன்.

  அன்பு நித்யகுமாரன்

  ReplyDelete
 6. //
  நாடோடி இலக்கியன் said...
  மலையாளத்தில் இதே கதை உதயநாணுதாரம் என்ற பெயரில் வெளிவந்தது,அந்த படத்தில் மோகன்லாலின் நடிப்பு நன்றாக இருக்கும்.
  //

  மலையாளப் படங்களின் தீவிர ரசிகரான உங்களிடமிருந்து இந்த தகவலை நான் இன்று தெரிந்து கொண்டேன். நாம் பார்க்கும் மலையாளப்படங்களெல்லாம் வேறுதான்.

  நன்றி

  நித்யகுமாரன்

  ReplyDelete
 7. இனிய பிரகாஷ்...

  உங்களின் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.

  அன்பு மஞ்சூர் ராசா...

  உங்களின் ஆர்வத்தின் குறுக்கே நிற்க நான் தயாரில்லை. மலையாளப் பதிப்பை பார்த்து விட்டு, அந்த பதிப்பு பற்றி மறவாமல் சொல்லுங்கள்.

  அன்புடன் நித்யகுமாரன்

  ReplyDelete
 8. தீவிர ரசிகரெல்லாம் கிடையாதுங்க,ஊரில் இருக்கும்போது தமிழைத் தவிர வேறு மொழி படங்கள் பார்ப்பது ரொம்பவே அறிது,இப்போதாங்க கொஞ்ச நாளா பார்க்க ஆரம்பிச்சிருக்கேன்.அதுவும் மோகன்லால் படங்கள் மட்டும்தான் பார்க்கிறது.
  ஆமா நீங்க பார்க்கிற மலையாள படங்களே வேறுன்னு சொல்லியிருக்கீங்களே அப்படி என்ன படங்க,உன்மையிலேயே தெரியாமத்தாங்க கேட்கிறேன்.

  ReplyDelete
 9. //
  நாடோடி இலக்கியன் said...

  ஆமா நீங்க பார்க்கிற மலையாள படங்களே வேறுன்னு சொல்லியிருக்கீங்களே அப்படி என்ன படங்க,உன்மையிலேயே தெரியாமத்தாங்க கேட்கிறேன்
  //

  நாடோடி...

  நம்மள வச்சு காமெடி கீமெடி பண்ணலியே.... அவ்வ்வ்வ்வ்...

  நித்யன்

  ReplyDelete
 10. Ungalin intha (given below)vimarsanam padithavudan sirippuvanthathu..

  ரொம்ப கேட்டால் நமக்கும் நாலு அறை விழும்போல இருக்கிறது.

  humorous soda eluthapattirukirathu.

  ReplyDelete
 11. நம்மள வச்சு காமெடி கீமெடி பண்ணலியே.... அவ்வ்வ்வ்வ்

  immm... escape? eppadiyo reply pannamal thappithakivittathu...

  ReplyDelete
 12. அனானியாக பதிவிட்ட அன்பருக்கு வணக்கம்.

  உங்களின் கருத்துகளுக்கு நன்றி.

  அடுத்தமுறை பெயரோடு பதிவிட்டால் மிக்க உதவியாயிருக்கும்.

  அன்பு நித்யகுமாரன்

  ReplyDelete
 13. அடடா ஒரு நல்ல படம் பாக்கலாம்னு ஆவலா காத்திருந்தேனே இப்படி பண்ணிட்டாங்களா? :(

  ReplyDelete
 14. வாங்க ஸ்ரீ,

  அடடா இப்படி ஆயிடுச்சே...

  நல்லவேளை நல்ல படம்னு நம்பி போயிருந்தா என்னவாகியிருக்கும்...

  அப்படி நினைத்து மகிழுங்கள்...

  அன்பு நித்யகுமாரன்

  ReplyDelete
 15. பிரகாஷ் ராஜ் படம் நன்றாக இருக்குமமென்று நினைத்தேன்..

  ReplyDelete
 16. இது இயக்குனர் விஜியின் இரண்டாவது படம் முதல் படம் அள்ளி தந்த வானம் நினைவில் கொள்க

  ReplyDelete
 17. இது இயக்குனர் விஜியின் இரண்டாவது படம் முதல் படம் அள்ளி தந்த வானம் நினைவில் கொள்க

  ReplyDelete
 18. பாசமலர்

  உங்களை மாதிரியேதான் நானும் நம்பி போனேன்... விதி வலியது.

  அன்பு நித்யன்

  ReplyDelete
 19. //
  vetrida puridal said...
  இது இயக்குனர் விஜியின் இரண்டாவது படம் முதல் படம் அள்ளி தந்த வானம் நினைவில் கொள்க
  //

  அந்த பட இயக்குநர் வேறொருவரென்று இப்போது கூட கூகுள் உதவியோடு தெளிந்தேன்.

  விஜிக்கு இது முதல் படம் என்றே எண்ணுகிறேன். விவரம் தெரிந்தவர்கள் சொன்னால் பரவாயில்லை...

  அன்பு நித்யகுமாரன்

  ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar