Tuesday, March 11, 2008

காலைக் கடன்..!


கதிர் கரங்களால்
சோம்பல் முறித்து
ஆதவன் வர முயலும் பொழுதில்...

விலக மறுக்கும் இமைகளோடு
படுக்கையில் தடவி
உனைத்தேடுகிறேன்...

எனக்குப்பிடித்த நீலநிற புடவையில்
ஈரஞ்சொட்ட தலைதுவட்டி
குறுஞ்சிரிப்போடு நிற்கிறாய்...

“ஜன்னல் அணி்ந்திருக்கிறதே
உனக்கும் எதற்கென்று”
உன் ஆடைதொட நானும்
துள்ளியோட நீயும்
எத்தனிக்கும் பொழுதில்...

தலையிலடித்துக் கொண்டே
கலைந்திருந்த படுக்கை
மீண்டும் கலையத்தயாராகிறது....

நன்றி குறிப்பு : நாடோடி இலக்கியனின் இந்த கவிதையே இதை எழுதத் தூண்டிய காரணி

9 comments:

  1. அட,இதுவும் அசத்தலாகத்தான் இருக்கிறது.
    நாடோடி என்று மட்டும் குறிப்பிடாதீர்கள்,அந்த பெயரில் இன்னொரு பதிவர் இருக்கிறார்,நாடோடி இலக்கியன் என்றே மாற்றிவிடுங்கள்.

    ReplyDelete
  2. அன்பு நாடோடி இலக்கியன்...

    உங்கள் விருப்பப்படி மாற்றப்பட்டு விட்டது.

    இதுவும் அசத்தல் என்று கூறியிருப்பது உங்கள் பெரிய மனசு...

    பேரன்புடன்
    நித்யகுமாரன்

    ReplyDelete
  3. நல்லா இருக்கு .அதை விட உங்கள்
    நேர்மை அழகா இருக்கு.
    நிறைய எழுதுங்கள்.
    வாசிக்க நாங்கள் உண்டு
    பத்மா....

    ReplyDelete
  4. மிக்க நன்றி பத்மா...

    உங்களின் வாழ்த்துக்களும் வார்த்தைகளும் உரம் பெறச் செய்கின்றன.

    பேரன்பு நித்யகுமாரன்

    ReplyDelete
  5. //தலையிலடித்துக் கொண்டே
    கலைந்திருந்த படுக்கை
    மீண்டும் கலையத்தயாராகிறது....//

    :))) நித்யகுமரன்
    எப்பொழுதும் கடனாளியாக இருக்க தோண்றுகிறது படித்த பிறகு... வெட்கம் துள்ளியோடும் கவிதை...

    ReplyDelete
  6. வாருங்கள் நவீன் ப்ரகாஷ் ...

    உங்களின் குட்டிக் குட்டிக் கவிதைகளின் ரசிகன் நான்.

    நீங்கள் என்றென்றும் கடனாளியாகவே இருக்க என் வாழ்த்துக்கள்..!

    பேரன்பு நித்யகுமாரன்

    ReplyDelete
  7. //தலையிலடித்துக் கொண்டே
    கலைந்திருந்த படுக்கை
    மீண்டும் கலையத்தயாராகிறது//

    கடன் வாங்குவது எவ்ளோ சுகமானது என்று இப்போதுதான் புரிகிறது!!

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. hi,unga kavithai romba nalla irinthichu, நாடோடி இலக்கியன், avaroda kavithai kodda padichachu.
    //தலையிலடித்துக் கொண்டே
    கலைந்திருந்த படுக்கை
    மீண்டும் கலையத்தயாராகிறது....
    romba arumayana varigal..
    "Anupavichu eluthiyirukanda"
    appadi enru sila kavithayai parthu sila per solvathundu nan appadi ellam solla virumbella.

    ReplyDelete
  9. நண்பர் தமிழ்ச்செல்வனுக்கு...

    மிக்க நன்றி.

    அன்பு நித்யகுமாரன்

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar