Friday, June 10, 2011

ஆரண்ய காண்டம்



ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம்.  எக்கச்சக்க எதிர்பார்ப்பை எகிறவிட்டிருந்தார்கள்.  The film deserve all those.

ஒரு Gangster கதைதான்.  முதல் காட்சியில் ஆரம்பித்து திசைக்கு ஒன்றாக கிளைத்து விரியும் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை கட்டிப் போடுகிறது.  ஓர் இயக்குநர் ஒரு திரைப்படத்திற்காக மெனக்கெடும் அளவிற்கு இந்த படம் அற்புதமான உதாரணம்.   எந்த ஒரு கதாபாத்திரமும் எங்கும் overact செய்யவில்லை.  குறிப்பாக அந்த சிறுவனின் பாத்திரம் வெகு இயல்பு. அவன் dialogue delivery is Excellent.  திரையில் கைதட்டல் வாங்குவதும் அவனது வசனங்கள்தான்.

ஜாக்கி ஷெராப் எந்தளவிற்கு இப்படத்திற்கு தேவையென்ற எண்ணம் எனக்கிருந்தது.  ஆயினும் முதல் மரியாதை சிவாஜியைப் போல இந்த பாத்திரத்தை அவர் தனக்காக வரித்துக் கொண்டு திரையில் கலக்கியிருக்கும் விதம் தமிழ் திரையில் காணக் கிடைக்காத அருகி வரும் விஷயம்.  “ஈஈஈஈ” என அவர் பல்லிளிக்கும் mannerism தனித்துவமாக வருகிறது.

சிறுவனுக்கும் அவன் தந்தைக்குமான உணர்வு பரிமாற்றம் மற்றும் உறவு புரிதல்களை இவ்வளவு குறைவான காட்சிகளில் அவ்வளவு solid ஆக சொல்லப்பட்டிருப்பது அற்புதம்.  அவன் தந்தையின் குரல் quite unique.  உங்களால் அவரது குரலின் தனித்தன்மையை கேட்ட உடனே உணர முடியும்.  உடைந்து வழியும் அந்த குரல் அந்த கதாபாத்திரத்திற்கு அப்படிப் பொருந்திப் போகிறது.

7G யில் பார்த்த ரவிகிருஷ்ணா அப்படியேயிருக்கிறார்.  இந்த பாத்திரத்தை ஒத்துக் கொண்டு அவர் நடித்திருப்பது அவருக்கு நல்லது.  ஹீரோவாகத்தான் வேஷம் கட்டுவேன் என படுத்தாமல் இப்படிப்பட்ட பாத்திரங்களை தேடித் தேடி நடித்தால் அவருக்கான இன்னொரு 7G அமையும் வரையில் நீடித்திருக்கலாம்.

சம்பத் ராஜ் அந்த பாத்திரத்திற்கு கனகச்சிதம்.  சிறுவனுடன் வரும் அவருடைய உரையாடல் சூப்பர்.

ஆரம்பத்தில் வரும் ஆண்ட்டி உஷார் பண்ணுவது பற்றிய விவரணைகள் படத்தின் தன்மையை பார்வையாளனுக்கு உணர்த்தி விடுகின்றன.  இது பவுடர் பூசி பொட்டு வைத்து அலங்கரித்து வரும் மேலோட்டமான படமல்லவென்று.  கடைசியில் அந்தப் பெண்ணின் மனக்குரலாய் வரும் “எனக்கு இந்த சப்பையும்  ஒரு ஆம்பளைதான், எல்லா ஆம்பளைங்களும் சப்பைதான்” என்ற வசனம் இந்த survival of the fittest society யின் ஒரு பரிமாணத்தின் ஒரு துண்டுப் பார்வை.

படத்தின் இசை யுவன். உலகத்தர படத்திற்கு அந்த தரத்திலேயே இசை. Class.

நிறைய காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதம் இந்த படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் ரசனைக்கு சான்று. ரவிகிருஷ்ணா அந்தப் பெண்ணுடன் சுற்றி வரும் Water tank இடமும், நகரும் கேமரா கோணமும் ஒரு உதாரணம்.

எழுதினால் நிறைய எழுதலாம்.  திரையில் பாருங்கள்.




இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும், தயாரிப்பாளர் சரண் அவர்களுக்கும் மரியாதை கலந்த நன்றிகள்.

மக்கள் இப்படத்தை கொண்டாடினால் மேலும் நல்ல படங்கள் வரும்.

அண்ணன் உண்மைத் தமிழனும், தண்டோராஜியும் கேட்டுக் கொண்டதால் எழுதினேன்.  ரொம்ப மாசம் gap விட்டாச்சு.




  

14 comments:

  1. நன்றி நித்யா..

    அவசியம் நாளை பார்க்கிறேன்.

    இதுபோல் மாதத்திற்கு ஒரு பதிவாவது எழுதவும்..!

    ReplyDelete
  2. அண்ணா...

    உங்களின் அன்பிற்கு நன்றி.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  3. இது தாங்க.. நான் உங்க பின்னால்யே சுத்த காரணமானது! : )

    ReplyDelete
  4. திரும்பவும் எழுத வந்தமைக்கு வாழ்த்துகள்.

    நானும் ரொம்ப எதிர்பார்த்த படம்தான்.. பட் இன்னைக்கு கொஞ்சம் வேலை.. ஒருவர் இந்த படம் மொக்கை ரொம்ப ஸ்லோவாக இருப்பதாக சொல்லி இருந்தார்... பட் படம் நல்லா இருக்கும் என்று உங்கள் விமர்சனம் சொல்கின்றது.. விரைவில் பார்க்கின்றேன்.. பகிர்தலுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  5. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    எனது ப்ளாக்கில்:
    பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
    புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
    A2ZTV ASIA விடம் இருந்து.

    ReplyDelete
  6. SUPER 'O'SUPER

    BY JOTHIDA EXPRESS

    WWW.SUPERTAMILAN.BLOGSPOT.IN

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar