Wednesday, May 7, 2008

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு...


இனிய நண்பர்களுக்கு...

அன்பான வணக்கங்கள். சமீபகாலமாக ஏதும் எழுத தலைப்படாமல் இருந்து விட்டேன். ஒரு மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது. சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லாததுதான் காரணமேயன்றி வேறொன்றுமில்லை. இப்போதுகூட காரணமேதுமில்லாமல்தான் எழுத எத்தனித்திருக்கிறேன்.

உங்களுடன் பகிர நினைத்த நிகழ்வுகளை புள்ளிகளாகத் தருகிறேன். வாசிக்க எளிமையாக இருக்கும்.

* நண்பர் தனசேகர் ஜாக்கிசேகர் என்று புதுவடிவம் எடுத்து கலக்கத் தொடங்கியிருக்கிறார். பட்டை சாராயம் போன்று மிகவும் ராவானவர், மிகவும் ரசனையானவர். roller coaster வாழ்க்கை என்பது இவருக்கு மிகச் சரியாகப் பொருந்தும். நண்பருக்கு இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

* யாரடி நீ மோகினி என்ற ஒரு குப்பைப் படத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன். தமிழ் சினிமாவின் தரத்தை 1mm உயர்த்தாவிட்டால் கூட பரவாயில்லை, அதை தாழ்த்தாமல் இருக்க இந்த நாயகர்களையும் அவர்களின் வெற்றிப்பட இயக்குநர்களையும் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

* IPL கிரிக்கெட் போட்டிகளைக் கண்டு மகிழ்ந்தும் வருந்தியும் வருகிறேன். ஹர்பஜன் சிங்கிற்கு மொத்தமாக தடை விதித்து அவரை வீட்டிற்குள் அமர்ந்து கிரிக்கெட் பார்க்க வைக்க வேண்டும் என்பது என் கட்சி. அவர் 10 க்கு 10 விக்கெட்டுகள் எடுத்தால்கூட நமக்கு தேவை கிடையாது.

* என்னுடைய 10 மாத பையன் அடமின்றி சாப்பிட TV தொடர்களின் முகப்பு பாட்டு கேட்கிறான் என்று, “திருமதி செல்வம்” என்ற விகடன் தயாரிப்பு தொடர் பார்க்க வாய்த்தது. அடக்கடவுளே என்று மனம் கஷ்டப்பட்டது. அந்த கதைக்கான கருவும் அதை இவர்கள் நகர்த்தும் விதமும், கடவுளே இவர்களெப்போது காணாமற்போனவர்கள் ஆவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். இந்த Information technology புரட்சி யுகத்தின் மிகப்பெரிய சாபக் கேடாக இந்த TV தொடர்களை நான் பார்க்கிறேன். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். அவர் பெயரைக் கொண்டும் தொடர்கள்....!!!!!!!

தொடர்ந்து மீண்டும் சந்திப்போம்.

பேரன்புடன் நித்யகுமாரன்.

6 comments:

 1. எஸ்கேப்பாகி ஒரு மாசம் ஓடிப் போயிருச்சா..?

  எனக்குத் தோணவே இல்லை..

  நல்லாயிருந்திருப்பீங்களே..

  அப்புறம் எதுக்கு இப்ப திடீர்ன்னு..?

  உடம்பு கெட்டு புத்தி பிசகிப் போச்சா..?

  ReplyDelete
 2. வாங்க, வாங்க. ஏதாவது எழுதிகிட்டே இருங்க, மொழி பண்படும்.

  ReplyDelete
 3. நன்றி , திரு நித்யா. என்னை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்க்கு.
  நான் பிளாக் எழுத நீங்கள்தான் காரணம் . நிங்கள் இல்லையென்றால் பிளாக் என்பது எனக்கு தெரிய சில மாதங்கள் ஆகியிருக்கும், அறிமுகப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி

  ReplyDelete
 4. உங்கள் எழுத்துக்கு நான் ரசிகன்.தினமும் வந்து உங்கள் வலைப்பூவை எட்டிப் பார்த்துவிட்டு, புதிய பதிவுகள் ஏதுமில்லாமல் ஏமார்ந்து போவேன்.என்னடா நித்யன் அசத்தலா ஆரம்பிச்சார், அப்படியே விட்டுட்டாரேன்னு நினைத்துக்கொண்டிருந்தேன்.நீங்கள் எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் சுவைபடவே எழுதுகிறீர்கள்,ஆதலால் எழுவதற்கு ஒன்றுமில்லை என்று இனியும் கூறாமல் கிடைக்கும் நேரத்தில் எழுதுங்கள்.
  இது ஒரு வாசகனின் வேண்டுகோள், கட்டளை,விருப்பம்,நட்பில் விளைந்த அதிகாரம் என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 5. சூபருங்கோவ்
  www.lathananth.blogspot.com
  படிச்சுப்பாருங்கண்ணா!

  ReplyDelete
 6. Again its more thana month now :((

  Anbu

  ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar