படத்தைப் பற்றிய பார்வையை இங்கு துளிகளாகத் தருகிறேன்.
* “கற்றது தமிழ்” படம் பார்த்தபோது “இந்த படம் வெற்றி பெற வேண்டுமே...” என்று உதித்த ஆசை, இந்த படம் பார்த்தபின்னும் தோன்றியது.
* இயக்குனர், தயாரிப்பாளர் திரு.சசிகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். மிகவும் அழகாக செதுக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது இந்த திரைப்படம். மிகுந்த துணிவுடனும், சிரத்தையுடனும், தமிழ் திரைப்பட ரசிகர்கள் மீது மிகுந்த நம்பிக்கையுடனும் வெளிவந்திருக்கிறது.
* அழகர், பரமு, காசி, துளசி, துளசியின் அம்மா, அப்பா, பெரியப்பா, சித்தப்பா - என ஒவ்வொரு பாத்திரங்களின் படைப்பும், நடிகர்கள் தேர்வும், அவர்களின் சரியான வெளிப்பாடும் அற்புதமாக ஒன்றிணைந்து, கதாசிரியனின் எழுத்து அற்புதமாக திரையி்ல் விரிகிறது.
* கவனத்தை சிதறடிக்காத ஒளிப்பதிவும், நம்மை எண்பதுகளுக்கே அழைத்துப் போகும் கலை வடிவமைப்புகளும், படத்தின் கோடு தாண்டாமல் பயணிக்கும் இசையும் இந்த திரைப்படத்திற்கு பலம் சேர்க்கின்றன. திரைப்பட அறிவியல் பற்றி அதிகம் தெரியாத காரணத்தால் மற்ற துறைகளைப்பற்றி எழுதத் தெரியவில்லை.
* நாயகியின் “வெட்கம் கலந்த ஆசையில் விரியும்” கண்களும், நாயகனின் “காதல் கலந்த வெள்ளந்திச்” சிரிப்பும் முதல் பாதியில் ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாதியில் நாம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் தடம் புரண்டு படபடவென பயணிக்கும் திரைக்கதையும், அனுமானிக்கவியலாதத் திருப்பங்களும் நம்மை ஆட்படுத்திக் கொண்டுவிடுகின்றன. அழகர், பரமு மற்றும் காசியின் ஊனமான நண்பன் மருத்துவமனை அறையினின்று வெளி்வந்து நடந்து போகும் காட்சியின் நீளம் முழுவதும் இருக்கையினின்று எழ மனம் வராதே போகிறது.
* காதல் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் படங்களின் வரிசையில் இத்திரைப்படம் சேர்கின்றது. நம் கலாச்சாரக் கட்டுப்பாட்டுக்குள் சிக்கிக்கொண்டு, மனம் ரீதியாக இயல்பாக வந்து தொலையும் காதலையும் கட்டிக்கொண்டு அழும் போராட்டத்தை இப்படம் அழகாக பதிவு செய்கிறது. காதல் என்கிற உணர்வைத்தாண்டாமல் எந்த மனிதனும் பயணிக்கவே முடியாது. அப்படி உயிர் இயற்கையாகிப்போயிருக்கும் இந்த உணர்வை, நம் சமூக நிலைப்பாடுகளுக்குள், ஒரு கட்டுக்குள்ளே வாழ்ந்து பழகிய மனம், எப்படி சமாளிப்பதெனத் தெரியாமல் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பது இந்த சமூகத்தின் அன்றாட நிகழ்வு என்பது அப்பட்டமான உண்மை.
* இந்த சூழல் பற்றிய புரிதலை, தெளிவை அடுத்த தலைமுறைக்குப் பதிவு செய்துதருகிறது இந்த திரைப்படம். ஒரு கலை வடிவாக திரைப்படத்தின் முயற்சியும் வெற்றியும் அதுதானே...
நன்றி எண் 1: உடனடியாக படம் பார்க்க வேண்டிய உணர்வை ஏற்படுத்திய நண்பர் குதிரை ஓட்டுனர் சேகரின் இந்த பதிவிற்கு
நன்றி எண் 2 : பதிவு இடாத நாட்களில் என்னை உற்சாகப்படுத்தி, பின்னூட்டம் வழங்கிய நண்பர் நாடோடி இலக்கியன் அவர்களுக்கு.
This is history of Jakie Segar name
ReplyDeletesiva said...
ஜாக்கிசேகர்
very nice and well said
"தினகரனுக்கும் கழகத்துக்கும் சம்மதமில்லை என்று முரசொலியில் செய்தி வெளியானவுடன் மக்கள் அடிப்படை பிரச்சனைகளை கையில் எடுததுக் கொண்டார்கள். இறைவனுக்கு நன்றி."
Jackie sekar means you are ride horses any race court??
puduvai siva.
Saturday, July 05, 2008 11:43:00 AM
jackiesekar said...
சிவா நக்கல்லாம் வேண்டாம்... ஜாக்கிசான் மேல் உள்ள மரியாதையால் இந்த ஜாக்கியை என் பேருடன் சேர்த்துக்கொண்டேன். அவ்வளவே
Saturday, July 05, 2008 12:08:00 PM
so friend now you know his name history.
and the film Subramainiya puram preview is really super and nice.
puduvai siva
நல்லா அவதானிச்சு எழுதி இருக்கீங்க! நாங்களும் படம் பார்த்துட்டோம்ல..! :))
ReplyDeleteரொம்ப நாளா ஆளைக் கானோம் போல இருக்கே. படம் பார்க்கும் ஆசையை வரிசையாகப் பல பேர் தூண்டி விட்டு விட்டார்கள். சீக்கிரம் பார்க்கணும்.
ReplyDeletehttp://blog.nandhaonline.com
புதுவை சிவா...
ReplyDeleteஉங்களின் விளக்கத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
எனக்கும் பாக்கனும்னு ஒரே ஆசையா இருக்கு. தமிழ்மணத்திலிருந்து வந்தா உங்கப் பதிவுல பின்னூட்டம் போட முடிய மாட்டேங்குது, அதை கொஞ்சம் சரி செய்யுங்களேன்
ReplyDeleteமிக்க நன்றி சிவா, என் மானத்தை காப்பாற்றியதற்க்கு. ஏதோ பார்த்தோம் போனோம் என்று இல்லாமல் என் பெயருக்கான விளக்கத்தை கொடுத்த போது ,என் மேல் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பை என்னால் உணர முடிகிறது. நன்றி புதுவை சிவா
ReplyDeleteயோவ் நித்யா, என் பேரு ஏன் ஜாக்கிசேகர்னு உனக்கு நல்ல தெரியும்.தெரிஞ்சும் ,குதிரை ஓட்டுநர் சேகர்னு நக்கல் விடறிங்களா? நீ தெரியாத போல நடிச்சாலும் என் நண்பன் சிவா என் பெயர் விளக்கத்தை கொடுத்துட்டார்.நல்ல வேளை கனரக வாகன தாங்கி சேகர்னு எழுதாம விட்டிங்களே
ReplyDeletePadatha pathuttu varen
ReplyDeleteதவறவிடாம கண்டிப்பாக பார்க்கிறேன் :-)
ReplyDeleteநீங்கள் தேன்கூடு நிரலியை இணைத்து இருந்தால் அதை நீக்கி முயற்சி செய்யுங்கள்..அது தான் உங்கள் பின்னூட்ட பகுதியை திறக்க தாமத படுத்துகிறது.
பாலபாரதி அண்ணாவுக்கு வணக்கம்.
ReplyDeleteதங்களின் அன்பு வார்த்தைகளுக்கு நன்றி.
நந்தா...
ReplyDeleteபடம் பாத்துட்டு நீங்களும் உங்க கருத்தை பதிவு பண்ணுங்க... ஆர்வமா எதிர்பார்க்கிறேன்.
அன்பு நித்யகுமாரன்.
Vannakkam nithya kumaarare,
ReplyDeletePadam paarkum aavalai thoondi vittu viteerkal....
அன்பின் நித்தியன்,
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு வலையுலகிற்கு திரும்பி இருக்கிறேன்.இப்போதுதான் உங்கள் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது.
விமர்சனம் நன்றாக வந்திருக்கிறது.
ஏன் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை?.
உங்களது நன்றி கூறலில் எனது பெயரையும் பார்த்து ஆச்சர்யம்+மகிழ்ச்சியடந்தேன்.மிக்க நன்றி நண்பரே..!
நல்லா விமர்சனம் பண்றீங்க, கலக்குங்க
ReplyDelete