இந்திய அணி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆமதாபாத் டெஸ்ட் போட்டியில் வெகுசிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது...
ஒரே ஒரு வருத்தம்தான். 20-20 மேட்ச் என்று நினைத்து விளையாடிவிட்டார்கள் போல... சரியாக 20 ஓவர்களுக்குள், சிங்கத்தை அதன் குகைக்குள் சென்று வென்று வந்துவிட்டதாக, எல்லா பத்திரிக்கை பத்திகளிலும் புகழ்ந்து சொல்லப்பட்ட நம் இந்திய அணி தன் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து... 76 ரன்கள் என்னும் இமாலய எண்ணிக்கையை பெற்றுள்ளது...
இங்கே போய் ஸ்கோர் கார்டு பார்த்து உள்ளம் பூரிப்படையவும்...
எல்லாரும் ஜோரா ஒரு தபா கை தட்டுங்க...
வயத்தெறிச்சல் அதிகமாகுது ((-
ReplyDeleteநீதி:
ReplyDeleteஇந்திய அணி விளையாடும்போதும், நண்பர்களுக்கு உதவிடும்போதும் எந்த எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது.
சந்தோஷமா இருக்கு.. இஇஇந்திய அணியின் உண்மையான முகம் இதுதான் என்பதை இன்னொரு முறையும் நம்ம தம்பிமார்கள் நிரூபித்துவிட்டார்கள்..
ReplyDeleteஅதான் ஒரு வருஷத்துக்கு சேத்து வெச்சு சென்னைல கொட்டிட்டாங்கள்ல.. அது பத்தாது..
ஒவ்வொரு மேட்ச்லேயும் டிரிபுள் செஞ்சுரி போடணும்னா முடியுமா? அவுகளுக்கு எப்போ தோதுபடுதோ அப்பத்தான் விளையாடுவாங்க..
அதுவரைக்கும் கோ-கோ-தான்..
ஆடும்போது அண்ணாத்தைய பார்க்கணும்
ReplyDeleteஆரயக்கூடாது
--------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
எப்பவும் விளையாட முடியுமா 10 மாட்சுக்கு ஒருதடவை விளையாண்ட பத்தாதா? டீல்ல விடுங்கப்பு
ReplyDeleteவயத்தெறிச்சல் தான் அதிகமாகுது :(((
ReplyDeleteகிட்ட தட்ட இதே போல் ஒரு பதிவு எழுதிவிட்டு (20-20, மதிப்பெண் அட்டை, எல்லாரும் கைதட்டுங்க) தமிழ்மணத்தை பார்த்தால் நான் நினைத்ததை எல்லாம் நீங்களும் எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteஎல்லாருக்கும் பொதுவானது சூரியனும் வயிற்றெரிச்சலும் என்று எங்கோ படித்த ஞாபகம் :) :)
//சந்தோஷமா இருக்கு.. இஇஇந்திய அணியின் உண்மையான முகம் இதுதான் என்பதை இன்னொரு முறையும் நம்ம தம்பிமார்கள் நிரூபித்துவிட்டார்கள்..//
ஆம் !!
இந்திய அணி பழைய ஃபார்ம்க்கு வந்துவிட்டது போல
ReplyDelete//நீதி:
ReplyDeleteஇந்திய அணி விளையாடும்போதும், நண்பர்களுக்கு உதவிடும்போதும் எந்த எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது//
இப்படி வேறயா, நித்யகுமாரன்..? ;(
(சூபி தத்துவம் மாதிரில இருக்கு..!!)
உண்மைத்தமிழன், தறுதலை மற்றும் கிரிக்கெட் ரசிகன்....
ReplyDeleteஉங்களின் கருத்தை இங்கு தெரிவித்தமைக்கு என் நன்றிகள்...
உங்களின் கருத்துக்கள் ஆற்றாமையின் வெளிப்பாடாகவே அமைந்தன. நாம் என்னதான் செய்துவிடமுடியும். ஒரு பதிவு போடலாம். ஒரு பின்னூட்டம் போடலாம். அவ்வளவுதான்.
நன்றி...
அன்புடன் நித்யகுமாரன்
புருனோ said...
ReplyDeleteகிட்ட தட்ட இதே போல் ஒரு பதிவு எழுதிவிட்டு (20-20, மதிப்பெண் அட்டை, எல்லாரும் கைதட்டுங்க) தமிழ்மணத்தை பார்த்தால் நான் நினைத்ததை எல்லாம் நீங்களும் எழுதியுள்ளீர்கள்.
* * * * * * * * * * * *
சேம் பிளட் புருனோ...
அன்பு நித்யகுமாரன்
முரளிகண்ணன் said...
ReplyDeleteஇந்திய அணி பழைய ஃபார்ம்க்கு வந்துவிட்டது போல
* * * * * * * * * * * *
இதுதான் அக்மார்க் நக்க்க்க்கல்ஸ்...
தென்றல் said...
ReplyDelete//நீதி:
இந்திய அணி விளையாடும்போதும், நண்பர்களுக்கு உதவிடும்போதும் எந்த எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது//
இப்படி வேறயா, நித்யகுமாரன்..? ;(
(சூபி தத்துவம் மாதிரில இருக்கு..!!)
* * * * * * * * * * * * *
ஐயோ ஐயோ... இது சும்மா வயித்தெரிச்சல்... அம்புட்டுதான் தல...
அன்பன் நித்யகுமாரன்