அன்பு நண்பர்களுக்கு ப்ரிய வணக்கங்கள்.
சமீபத்தில் திரையில் பார்த்து லயித்த படங்கள் இரண்டு. விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அங்காடித்தெரு.
ஒன்றுக்கொன்று சற்றும் சம்பந்தம் சொல்லமுடியாத திரைப்படங்கள். கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி மனதில் நின்று கொண்டிருந்தார்கள். பாவம் கார்த்தி. He deserve something better than Jessy என்று மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. த்ரிஷா ஒரு பேட்டியில் சொன்னதைப்போல கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று மனதில் பட்டது.
But one fine morning, ஜெஸ்ஸி எப்படி தன் இருப்பைக் காட்டிக்கொள்வாள் என்பதில் சந்தேகம் வந்து, கார்த்திக்கை ஜெஸ்ஸியிடம் இருந்து காப்பாற்றிய விதிக்கு (கௌதம் வாசுதேவ் மேனன்) நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
ஒரு திரைப்படமாக மிகச் சிறப்பான அம்சங்களோடு மிளிரும் படம் இது. திரைக்கதை உத்திகள் அற்புதம். நம் அல்லா ரக்கா ரஹ்மானின் பாடல்கள் இன்று வரை மனதை மிகவும் படுத்திக் கொண்டே இருக்கின்றன. அற்புதமான Album. Master piece என்று சொன்னது கூட உண்மைதான்.
சிம்புவின் நடிப்பு ஒரு அற்புதமான கட்டத்தை எட்டியிருக்கிறது. த்ரிஷாவும் சிரிக்காமல் சிரித்து, அழகாய் மழுப்பி, ஆசையில் திளைத்து, மீள முடியாமலும், ஆள முடியாமலும் தவித்த தவிப்பு - அற்புதம். She is too hot.
கௌதமின் படைப்புகளில் இது ஓர் அழகு நிறைந்த படைப்பு. அவர் ஒரு பேட்டியில் சொன்னதைப் போல, தோற்றுப் போகும் காதல்தான் ஒரு படைப்பாக நிற்கும் என்பதும் உண்மைதான். Dr.விஜய் நடித்த பாசிலின் “காதலுக்கு மரியாதை” வேறொரு விதமான தளத்தில் மின்னியதும் தற்போது நினைவிற்கு வருகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * *
“அங்காடித்தெரு” தமிழில் ஒரு தைரியமான, சுதந்திரமான, தேவையான, காத்திரமான படைப்பு. கனியும் லிங்குவும் நம் கண் முன்னே நடமாடும் மனிதர்கள். அவர்களின் வாழ்க்கைக் களம் இதுவரை explore செய்யப்படாததாக அமைந்தது இயக்குநரின் பலம் மற்றும் பலவீனம். அதை அவர் கையாண்ட விதத்தில் அவர் அபரிமிதமான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
வசந்தபாலனின் வெயில் அதிகம் வெக்கையையே கக்கியது. அங்காடித்தெரு இயல்பாக மெதுவாக சந்தோஷமாகத்தான் பயணிக்கிறது.
வெயிலில் ஒரு காட்சி வரும். தியேட்டர் ஆபரேட்டிங் அறையில் பசுபதியும் கதை நாயகியும் கையுங்களவுமாக பிடிபட, அதைத் தொடர்ந்து வரும் காட்சி. அதே போல் காதல் திரைப்படத்தில் பரத்தையும் சந்தியாவையும் அவர்களின் திருமணத்திற்குப்பிறகு சென்னையில் கண்டு பிடித்து, மதுரைக்கு அழைத்து வந்து பரத்தை உருட்டிவிட்டு உதைக்கும் காட்சி. இந்த காட்சிகள் நீண்ட காலத்திற்கு மனதை பிசைந்து வந்தது. ஆனால், கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயாவில் கார்த்திக் ஜெஸ்ஸியை அவள் வீட்டு தோட்டத்தில், இரவு நேரத்தில் Just like that வந்து பார்த்து, ஊடோடி, கட்டிப்பிடித்து,..... என்னென்னவோ செய்துவிட்டு மாட்டிக்கொள்ளாமல் போய்விடுவார்.
அங்காடித்தெருவில் லிங்கு கனியுடன் வேலைசெய்யும் இன்னொரு ஜோடி மாட்டிக் கொள்ளும் காட்சியும் அப்படித்தான் தடதடவென படபடக்கிறது.
ஜெயமோகனின் one liner கள் படத்தை மேலும் சுவாரஸ்யப்படுத்துகின்றன. கனியாக வாழ்ந்திருக்கும் அஞ்சலியின் நடிப்பு அற்புதம். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் பெண்ணை நான் காதலிக்கத் தொடங்கிவிட்டதாக படம் பார்க்க வந்த நண்பர் ஜாக்கி சேகர் சொன்னார். கற்றது தமிழிலேயே அஞ்சலி அற்புதம்.
அற்புதமான திரைப்படம். உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * *
நண்பர் ஜாக்கிசேகர் அவர்கள் பணிபுரிந்த விஜய் படம் நாளை திரைக்கு வருகிறது. சன் டிவியில் 30 நிமிடத்திற்கு மூன்று முறை வரும் சுறா விளம்பரத்தை பொது நல வழக்கு போட்டு தடுக்க வாய்ப்பிருக்கிறதா?
நண்பரோடு நாளை படம் பார்த்துவிட்டு உடல் நலக்குறைவு ஏற்படாமல் இருந்தால் சுறாவைப் பற்றி புட்டு வைக்கிறேன். “சுறாப்புட்டு” - அட தலைப்பு கூட சிக்கி விட்டதே.
அன்புடன்,
நித்யகுமாரன்.
அங்காடித் தெரு இன்னும் பார்க்கவில்லை.
ReplyDeleteவி.தா.வ படம் பெரிதாய் என்னைக் கவராவிட்டாலும் கிளைமேக்ஸ் மற்றும் சிம்புவின் நடிப்பு இரண்டும் எதிர்பார்க்காத ஆச்சர்யங்கள்.
சுறா புட்டு படம் பார்த்துதான் கதை சொல்லனுமா என்ன ட்ரைலர் ஒன்றே போதுமே.
பி.கு:நீங்க என் பிரியத்திற்குரிய நண்பர் என்பதால் கேட்கிறேன் நாளை அந்த படத்தைப் பார்த்தே ஆகனுமா?
அன்பு நண்பர் இலக்கியனுக்கு வணக்கங்கள்.
ReplyDeleteஅங்காடித்தெருவை தவற விடாதீர்கள்.
இன்றே சுறாவைப் பார்ப்பது நண்பர் ஜாக்கிக்காக மட்டுமே.
மிக்க நன்றி.
அன்பு நித்யன்
நல்ல பகிர்வு.. அப்புறம் என்ன திடிர்னு வலைபக்கம்...
ReplyDeleteநாடோடி இலக்கியன் கேள்விக்கு பதில் சொல்லுங்க...