Monday, February 11, 2008

திரைப்பாடல்களில் காதல் கவிநயம்...

அன்பானவர்களுக்கு வணக்கம்...

சமீபத்தில் என் நண்பர் கதிரவனுடன் உரையாடிக்கொண்டிருந்த போது சிவாஜி படப்பாடலில் இருந்து

“ அடடா... குமரியின் வளங்கள்...
குழந்தையின் சிணுங்கல்...
முரண்பாட்டு மூட்டை நீ...” - என்று நாயகியை நாயகன் வர்ணிக்கும் வரிகளைப்பற்றிச் சொன்னபோது “அட இதை கவனிக்கவில்லையே” என்று சொன்னார். இதைப்போன்று பல பாடல்களில் கவனிக்கத்தக்க சிந்தனைகள் உள்ளன. ஆனால் அவை தனியாக வெளிச்சம் போட்டு சொல்லப்படாததால் கவனிக்கப்படாமலேயிருக்கின்றன.

அப்படி கவனிக்கப்படாமல் விடப்பட்ட வரிகளை நாம் தேடிக்கண்டுபிடித்து, மகிழ்ந்து, எழுதி, பிறரையும் மகிழ்விக்கலாமென்று எண்ணினேன். எனக்கு சட்டென்று நினைவிற்கு வரும் வரிகளை இப்போது இங்கு குறிப்பிடுகிறேன். உங்களுக்குத் தோன்றும் வரிகளை மறுமொழியில் சொல்லுங்களேன்...

ஒரே ஒரு விதி மட்டுமே : அவை காதல் வரிகளாக இருக்கட்டும்... இது காதல் மாதமல்லவா...

“கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்னை சுமக்கவா...
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா...
மையிட்ட கண்ணே உன்னை
மறந்தா... இறந்தே போவேன்....” - “உருகுதே... மருகுதே...”

“வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்...
இலையுதிர்காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்...” - “ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்...”

“மறுபடி ஒருமுறை பிறந்தேனே...
விரல்தொட புருவம் சிவந்தேனே...

எனதிரவினில் கசிகிற நிலவொளி நீயே... படர்வாயே..
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...” - “ரகசிய கனவுகள்...”

“என்னைவிடவும் என்னை அறிந்தும்... யார் நீ என்று கேட்காதே...
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆக்காதே...” - “ குல்முகர் மலரே...”

“இரவைத்திறந்தால் பகல் இருக்கும்
என் இமையைத்திறந்தால் நீயிருப்பாய்...”- “என்மேல் விழுந்த மழைத்துளியே...”

“தனிமையே போ... இனிமையே வா...
நீரும் வேரும் சேர வேண்டும்...” - “பனி விழும் இரவு...”

“கொடி ஒன்று கனி ரெண்டு
தாங்காமல் தாங்காதம்மா....” - “சிங்களத்துச் சின்னக்குயிலே...”

“நீ வெட்டி வெட்டி போடும் நகத்திலெல்லாம்
குட்டி குட்டி நிலவு தெரியுதடி...” - “நீ கட்டும் சேலை...”

“மாமர இலைமேலே மார்கழி் பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ...” - “தூங்காத விழிகள் ரெண்டு...”

“கூந்தலென்னும் ஏணியேறி முத்தமிட ஆசைகள் உண்டு...
நெற்றி மூக்கு உதடு என்றே...
இறங்கி வர படிகளும் உண்டு...” - “ கேளாமல் கையிலே...”

இனி உங்கள் விருப்பங்கள் தொடரலாம்...

26 comments:

  1. //“ அடடா... குமரியின் வளங்கள்...
    குழந்தையின் சிணுங்கல்...
    முரண்பாட்டு மூட்டை நீ...” //
    பார்வையிலே குமரியம்மா,பழக்கத்திலே குழந்தையம்மா என்று ஒரு பழைய பாடலை நினைவு படுத்துவதாக இருக்கிறது இந்த வரிகள்.
    நான் ரசித்த காதல் பாடல் வரிகள் நிறைய இருக்கிறது,அதற்கு தனிப் பதிவே போடலாம்.
    உதாரணமாக ஒரு சில வரிகள்,
    "சின்ன காம்புதான பூவத் தாங்குது.."-பொத்தி வச்ச மல்லிக மொட்டு
    "எப்பொழுதும் உன் சொப்பனங்கள்,முப்பொழுதும் உன் கற்பனைகள்,சிந்தனையில் நம் சங்கமங்கள்,ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்"-தாலாட்டும் பூங்காற்று நானல்லவா,
    "நீ வானம்,நான் நீலம் உன்னில் நானாய் உறைந்திருப்பேன்"-நீ காற்று நான் மரம்,
    இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்"-நீ பாதி நான் பாதி கண்ணே,
    "உன்னைப் போன்றப் பெண்ணை கண்ணால் பார்க்கவில்லை,உன்னையன்றி யாரும் பெண்ணாய்த் தோன்றவில்லை"-ஒரு காதல் என்பது.,
    "கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது?
    ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது? இயல்பானது"-ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்,
    இன்னும் ஒரு பெரிய பட்டியல் இருக்கு.

    ReplyDelete
  2. Hi Senthil,

    This is saravanan from Bangalore.It's really amazing. how ru getting time to do this?

    Anyway all the best and I am very proud to be one of your friend(I hope so)
    Sorry for posting my commentin English.

    Bye

    Continue ur good work.

    Regards

    G.Saravanan

    ReplyDelete
  3. நாடோடி இலக்கியனுக்கு...

    வணக்கம். பதிவு அளவிற்கு பின்னூட்டம் இட்டு உங்கள் ஆர்வத்தையும், அன்பையும் காட்டியமைக்கு மிக்க நன்றி...

    நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். நாம் நிறைய பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கவிதைத்தேர்வும் மிக அருமை.

    நன்றி

    ReplyDelete
  4. நண்பர் சரவணனுக்கு...

    உங்கள் வார்த்தைகள் கண்டேன். கழிபேருவகை அடைந்தேன். தொடர்ந்து வாருங்கள் வாசியுங்கள். நேரம் கிடைக்காம எங்க போவுது சரவணன், கட்டி இழுத்து வர வேண்டியதுதான்.

    Hope things are moving fine for you.

    We shall meet soon

    ReplyDelete
  5. படித்தவுடன் ராகத்துடன் பாடி மகிழ்ந்தேன்..

    நன்றி....

    ///

    வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
    உனது கிளையில் பூவாவேன்...
    இலையுதிர்காலம் முழுதும்
    மகிழ்ந்து உனக்கு வேராவேன்

    ///

    ReplyDelete
  6. வாங்க tbcd...

    உங்கள் வருகையால் என் வலைப்பக்கம் பெருமை கொள்கிறது. கலாய்க்கலங்க. உள்ளத்தை சொல்றேன்... I mean saying from my heart.

    நீங்கள் பாடி மகிழ காரணமாய் இருந்தது குறித்து மகிழ்கிறேன்... இரண்டு பாட்டு எழுதிட்டு போனா கொறஞ்சா போய்டுவீங்க..

    ReplyDelete
  7. //சின்ன காம்புதானே பூவைத் தாங்குது...பொத்தி வச்ச மல்லிக மொட்டு- மண்வாசனை//

    ReplyDelete
  8. தோழி புனிதா...

    உங்கள் வாசிப்பிற்கும், வரிகளுக்கும் மிகுந்த நன்றி...

    இன்னொரு வரி...

    “விருந்து கேட்பதென்ன...
    அதையும் விரைந்து கேட்பதென்ன...”
    - “முத்துக்களோ கண்கள்...”

    ReplyDelete
  9. யாருப்பா இது உ,பா வ எடுத்து காதுல ஊத்திறது...

    ReplyDelete
  10. ///யாருப்பா இது உ,பா வ எடுத்து காதுல ஊத்திறது...///

    வாங்க “clown“ வினோத்...

    “உ பா வ” என்றால், “உற்சாகமான பாடல் வரிகள்” என்றுதானே சொல்ல வருகிறீர்கள்...

    வாங்க வந்து கலக்குங்க.... :)

    ReplyDelete
  11. நல்ல பதிவு.

    கையேந்தும் ஆட்டுகுட்டி கன்னி பெண்ணா மாறாதோ
    மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீர பேசாதோ....

    நான் ஏரிக்கரை மேலிருந்து...( சின்ன தாயி)
    பாடல் முழுவதுமே அற்புதமாக இருக்கும்

    இந்த பாடல் பிடித்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?

    நன்றி
    நித்யா பாலாஜி

    ReplyDelete
  12. நித்யா பாலாஜி,

    //இந்த பாடல் பிடித்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?//

    நான் இருக்கேன். :)


    "நான் ஏரிக்கரை மேலிந்து எட்டுத் திக்கும் பாத்திருந்து ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலை...

    மணி ஏழுஎட்டு ஆனபின்னும் ஊரடங்கிப் போனபின்னும் சோறுதண்னி வேணுமின்னு தோணலை..."

    இந்தப் பாடல்தானே? பாட்டு, ரிதம், லொகேஷன் அதைவிட இயல்பான அழகோட அந்த ஜோடி.

    ஆனா நெட்ல அந்தப் பாட்டெல்லாம் கிடைக்காது. டிவி காண்பிச்சா தான் உண்டு. :(

    ReplyDelete
  13. நித்யா பாலாஜி மற்றும் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் உங்கள் இருவருக்கும் வணக்கம்...

    http://video.google.com/googleplayer.swf?docId=-6383599793523625904

    மேற்கண்ட தளத்தில் சென்று பாருங்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும். மிக்க நன்றி...

    ReplyDelete
  14. hi Nidhya,
    vidhiyasamaga irukirathu ungkal pathivu.. rasanai...

    Azhage pramanidam manukodukka poyirunthaen.....Nee....

    Aandu pala kaathirukka vendum entu avan sonnan - Aayilvarai kaathiruppaen entu naanum sollivandaen

    Idayam Karuvaraithan unnai naan sumappathinal naanum annai aakiraen
    ennai padaitha antha theyvam ennai sumantha antha theyvam intha irandum unthan kannil paarkiraen

    song also nicely sung

    ReplyDelete
  15. yeatho ANTHAKSHARI maathiri illa..

    neengal yeatho oru kaathal paatu elutha... padippavarkal athai thodara ithuvum oru vilaiyattu thano

    Andrew

    ReplyDelete
  16. ஆண்ட்ரூவுக்கு நன்றி...

    உங்களுக்காக ஒரு பாடல் வரி...

    “உலகினில் உள்ள சித்ரவதைக்கெல்லாம் செல்லப்பெயர் வைத்தால்...காதல்” -
    “தொட்டுத் தொட்டு என்னை..” என்ற 'காதல்' திரைப்படப்பாடலில் இருந்து இந்த வரிகள்...

    ReplyDelete
  17. நாளும் அழுது தீர்த்ததாலே
    கண்கள் ஏழையானதே - வெள்ளை புறா ஒன்று (புதுக்கவிதை)


    நான் ஏரிக்கரை எனும் பாடல் அற்புதமான பாடல்

    நாகூர் இஸ்மாயில்

    ReplyDelete
  18. நாகூர் இஸ்மாயில்...

    உங்கள் வரிகளுக்கு நன்றி...

    இனி உங்களுக்காக இன்னொரு பாடல் வரி... “திருடா திருடா” படத்திலிருந்து “ராசாத்தி என்னுசுரு என்னுதில்ல..“ பாடலிலிருந்து

    “கரிசக்காட்டு ஓடையில
    கண்டாங்கி தொவைக்கயில...
    துணியை நனைய விட்டு
    மனச புழிஞ்சவளே...”

    “காத்துல எழுதனும்
    பொம்பளங்க சொன்ன சொல்ல..”

    ReplyDelete
  19. நாகூர் இஸ்மாயில்...

    உங்கள் வரிகளுக்கு நன்றி...

    இனி உங்களுக்காக இன்னொரு பாடல் வரி... “திருடா திருடா” படத்திலிருந்து “ராசாத்தி என்னுசுரு என்னுதில்ல..“ பாடலிலிருந்து

    “கரிசக்காட்டு ஓடையில
    கண்டாங்கி தொவைக்கயில...
    துணியை நனைய விட்டு
    மனச புழிஞ்சவளே...”

    “காத்துல எழுதனும்
    பொம்பளங்க சொன்ன சொல்ல..”

    ReplyDelete
  20. kaathalanin athanai kurumbum kaathalikku sukamana chithravathaiyaa
    athuthan kaathala nidhya
    andr

    ReplyDelete
  21. ஆண்ட்ரூ...

    காதலில் சித்ரவதை என்று தனியே ஏதுமில்லை. காதலே ஒரு சித்திரத்தின் வதை தானே...

    எப்படி இப்படியெல்லாம் எழுத வைக்கிறீங்க...

    ReplyDelete
  22. //கையேந்தும் ஆட்டுகுட்டி கன்னி பெண்ணா மாறாதோ
    மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீர பேசாதோ....//
    என்னுடைய கல்லூரி நாட்களில் எனது கைஏடுகளில் இந்த வரிகளை எழுதி வைத்திருப்பேன்.நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.நான் 8ம் வகுப்போ,9ம் வகுப்போ படிக்கும் போது இந்த படம் வெளிவந்தது,அப்போதே இந்த வரிகளை ரசித்திருக்கிறேன்.

    ReplyDelete
  23. காதலே ஒரு சித்திரத்தின் வதை தானே...

    eppadi ippadi silaedaiyaka eluthukireerkal - ethu elutha vaikirathu..
    kaathal thottuponal athuvum oru chithiram pontathuthaan.. kathalanin idhaya araiyin suvaril varaiyapatta chithiramo..kaathalanukkaka mattumae
    Karppanaiyai konjam thatti eluppum ungal varikalai padithaal

    ReplyDelete
  24. நாடோடி இலக்கியன்...

    உங்கள் மறுவரவுக்கு என் மகிழ்ச்சியான வந்தனங்கள். அந்த பாடலை இப்போதுதான் ஊன்றிக்கேட்டேன். மிகவும் அருமையாக இருக்கிறது.

    உங்களுக்காக இன்னொரு வரி...

    “காதல் வந்தால் சொல்லியனுப்பு
    உயிரோடிருந்தால் வருகிறேன்...”
    “இயற்கை” படப்பாடல்.

    ReplyDelete
  25. உள்ளிருந்து வேர்வை வந்து நீர் வார்க்கும்
    புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
    அடிக்கடி தாகம் வந்து ஆளைக்குடிக்கும்
    (ஆயிரம் தாமரை மொட்டுகளே.

    ரமேஷ் வைத்யா

    ReplyDelete
  26. அற்புதமான காதல் வரிகளை தந்து விட்டுச்சென்ற நண்பர் ரமேஷ் வைத்யாவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    அன்பு நித்யகுமாரன்

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar