எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் மறைந்தபின் எழுந்த அஞ்சலிகளும், அதைத் தொடர்ந்து அந்த அஞ்சலிகளை எதிர்த்துப் பிறந்த பதிவுகளும் என்னுள் மிகுந்த மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தின. நம் மனத்தில் தோன்றும் (பிரசுரிக்கும்படியான) கருத்துக்களை எழுதுவதற்கே நாம் blog எழுதுகிறோம். அப்படியென்றால், இந்த பதிவுகளைப்பற்றி கருத்து சொல்வதில் தப்பேதும் இல்லையே என்று மனதில் பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக நான் தமிழ்ப்பதிவுகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு மாத காலமாக blog எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கு நான் காணும் பல விஷயங்கள் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதப் பட்டவையோ என்று எண்ண வைக்கும் வகையில் எழுதப்படுகின்றன. தாம் கவனிக்கப்படவேண்டும் என்பதற்காக எழுதப்படும் எழுத்துக்களையும் நான் காண்கிறேன். இங்கு அதிக ஹிட்களை பெறுவதே பிரதானமாக காணப்படுகிறது. அதுதான் குறிக்கோள் என்று செயல்படும் பதிவுகளை எளிதாக கண்டுகொள்ள முடிகிறது. அவர்கள் எழுதும் பதிவுகளின் தலைப்புகளிலேயே அது தென்படுகிறது.
இனி தொடர்ந்து பதிவுகளை எழுதலாமா அல்லது விட்டுவிடலாமா என்பது போன்ற எண்ணங்களும் என்னுள் எழுகின்றன. இங்கு எப்படிப்பட்ட விஷயங்களுக்கு முன்னுரிமையும், வரவேற்பும் தரப்படுகின்றது என்பது தமிழ்மணத்தின் சூடான இடுகைகளைப்பார்க்கையில் வெள்ளிடை மலையாகிறது. இங்கு பல்வேறு குழுக்களாக பதிவர்கள் செயல்பட்டு அவர்களுக்குள் நடைபெறும் விவாதங்களே பதிவுகளாக வருகின்றன. அவை சூடான இடுகைகளில் இடம் பிடித்து, சூடான இடுகைகளுக்கான இயல்புகள் என்னவென்பதை வெட்டவெளிச்சமாக்குகின்றன.
சுஜாதா என்ற ஓர் எழுத்தாளன் தன் 73ம் வயதில் இறந்தபிறகு, இங்கு எழுதப் படும் பதிவுகள் அவற்றின் தரம்பற்றி தாமே சொல்கின்றன. அடிப்படை நாகரீகப்பண்பின்றி எழுதப்படும் பதிவுகளுக்கும் குடைபிடிக்கும் போக்கு இந்த தளத்தில் இயங்குபவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் இது எனக்கு உகந்த தளம் அல்ல என்று உணர்கிறேன். நானொன்றும் தமிழ் எழுத்துலகின் தவிர்க்க முடியாத எழுத்தாளன் அல்ல. நல்ல எழுத்துக்களை நாடி வாசிக்கும் ஒரு வாசகன். படைப்புலகச் சிந்தனையோடு வலைய வரும் ஒரு வாசகன். அவ்வளவே...
மூன்றாந்தர வார்த்தைகளை மிகச் சாதாரணமாக பயன்படுத்தும் போக்கும் இங்கு வெகு இயல்பாகவே உள்ளது. அதற்கு ஆயிரத்தெட்டு வியாக்யானம் சொல்பவர்களின் வார்த்தைகளை கேட்கும் பக்குவம் எனக்கு வரவில்லையென்று அவர்கள் சொல்லிக்கொள்ளட்டும்.
இந்த வலைத்தளத்திரட்டிகளில் முதன்மையாக செயல்படுவோரிடத்திலும் வியாபார சூட்சுமங்களே முதலிடம் வகிக்கின்றன. அவர்களின் பதிவுகளின் தன்மை அதனால் மங்கிப்போகவும் வாய்ப்புள்ளதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவனம் கொள்ளவில்லை. இன்றைய தேதியில் என்ன நடக்கிறது என்பதுதான் பிரதானமாக இருக்கிறது.
தான் சார்ந்த சமூத்தின் நிலைகுறித்தும் அதன் வளர்ச்சிக்காகவும் எழுதப்படும் வார்த்தைகளே காலத்தால் குறித்துவைத்துக்கொள்ளப்படும். தனிமனித காழ்ப்புணர்ச்சியோ அல்லது துவேஷமோ, குழு மனப்பான்மையின் போதையோடமைந்த வார்த்தை விளையாட்டுக்களோ நிச்சயமாக நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும் வாகனங்களாக அமையாது என்பது என் எண்ணம்.
என்னுடைய வாழ்க்கைச்சூழலில் நான் வரையறுத்து ஒதுக்கும் காலத்தில், இந்த வலைப்பதிவுகளில் நான் இயங்க விரும்பும் விஷயங்கள், மேற்கண்டவை குறித்த விவாதங்களோ அல்லது விருப்பு வெறுப்பு அபிப்பிராய பேதங்கள் குறித்த வெட்டி வாதங்களோ அல்ல. “வாசித்தோமா... போனோமா...” என்ற மனநிலை விரைவில் வாய்க்கும்பட்சத்தில் “அடப்போங்கப்பா....” என்று சொல்லி ஒதுங்கிப்போகப்போகிறேன். அந்த கால கட்டம் வரும்வரை இந்த பதிவை எண்ணிக்கொண்டு நான் சற்றேனும் இளைப்பாற விரும்புகிறேன்.
:-) hmm.. ipo thaaney vandhu irukeenga... either palagidum.. (athaavadhu thevai ilathatha othikirunga) .. or maariduraanga.. (maaridaatheenga..)
ReplyDeleteno tensions !!! :-)
Dear Nithya,
ReplyDeleteTo really say, I am reading the blogs for an year now and I have never posted one. Just becoz of the way the things are argued and addressed. I never comment too- except the one I did to Mr. N. Ganesan. It is a well written matured stuff and I totally agree with your view
Sundar
நண்பர் நித்ய குமாரன்,
ReplyDeleteஇது கட்டற்ற வெளி. அதை தெரிந்து தான் நீங்களும் எழுத நுழைந்திருப்பீர்கள். இங்கு வந்த பின் ஏன் இந்த பின்வாங்கல்? மிக சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பதிவுகள் நிறையவே உள்ளன. வேண்டாம் இந்த முடிவு. மீண்டும் ஒரு முறை யோசிக்கவும்.
நீங்கள் பாட்டுக்கு எழுதுங்கள். என்னைப்போன்றவர்களுக்கு.
ReplyDeleteஅவரவருக்கு என்ன பிடிக்கிறதோ, அவர்கள் அதை படிக்கட்டும்.
தமிழ்மணம் என்பது ஒரு கடை வீதி போல். இங்கு நாயர் டீ போடுவார். மிலிட்டரி ஹோட்டலில் சிக்கன் பரோட்டா கிடைக்கும். உடுப்பி பவனும் உண்டு, அருண் ஐஸ்க்ரீமும் உண்டு, டாஸ்மாக்கும் உண்டு.
உங்களுக்கு ஐஸ்க்ரீம் பிடிக்கிறது. அந்த தெருவில் டாஸ்மாம் பார் இருந்தால் நுழையாமலா போவீர்கள்
உங்களுக்கு ஐஸ்க்ரீம் பிடிக்கிறது. அந்த தெருவில் டாஸ்மாக் பார் இருந்தால் ஐஸ்க்ரீம் கடைக்குள் நுழையாமலா போவீர்கள்
ReplyDeleteஹாஹாஹா அருண்மொழி நீங்கள் இங்கே தவறி சொன்னதுபோல தெரிந்தோ தெரியாமலோ வழிதவறி டாஸ்மாக்கினுள் போனால் கூட பரவாயில்லை. டாய்லெட்டினுள் அல்லவா போய்விட்டுகிறோம்.
ReplyDeleteஇனிய உளவாக இன்னாதகூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று..!
ReplyDeleteவாசிப்பிற்கும் இது பொருந்தும் நித்யன்... :)
யாத்ரீகன், சுந்தர், பிரேம்ஜி, அருண்மொழி, காயத்ரி மற்றும் ஓர் அனானி,
ReplyDeleteஉங்கள் அனைவருக்கும் என் வணக்கம்.
உங்களின் வார்த்தைகளின் ஆதார சுருதியை நான் உள்வாங்கிக்கொண்டேன். உங்களின் அன்பிற்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி...
பேரன்புடன் நித்யகுமாரன்
நண்பர்களே...
ReplyDeleteஇந்த பதிவு எதற்காக தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் இடம் பிடித்திருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை.
யாரேனும் தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கிச்சொல்ல முடியுமா...
குழப்பத்துடன்,
நித்யகுமாரன்.
//இனி தொடர்ந்து பதிவுகளை எழுதலாமா அல்லது விட்டுவிடலாமா என்பது போன்ற எண்ணங்களும் என்னுள் எழுகின்றன. //
ReplyDeleteதமிழ்மணம் மட்டுமே வலையுலகம் அல்லவே! இந்த சூழல் பிடிக்கவில்லை என்றால் தமிழ்மண திரட்டியில் இருந்து விலகி கொள்ளளாம் அல்லது அதில் கவனம் செலுத்தாமல் வேறு பல நல்ல பதிவுகளை படிக்கலாம்.(நல்ல பதிவுகளே இல்லை என்று நினைத்தால் ஒரு சோக ஸ்மைலி போட்டுக்கிறேன்:(((((((
குசும்பனுக்கு வணக்கம்.
ReplyDeleteஉங்களின் நேரமொதிக்கி எனக்காக வார்த்தைகளைச் சொன்னமைக்கு மிக்க நன்றி.
பேரன்பு நித்யகுமாரன்
வசந்தம் ரவி அவர்களே...
ReplyDeleteவணக்கம். உங்கள் வருகைக்கும் ஸ்மைலிக்கும் மிக்க நன்றி.
இந்த ஸ்மைலி எதற்காகவென்றுதான் புரியவில்லை. சொன்னால் மகிழ்வேன்.
அன்புடன் நித்யகுமாரன்.
நண்ப, நலம் விரும்புகிறேன். கடந்த 2 மாதத்தில் ஆயிரம் நல்ல பதிவுகள் வந்திருக்கும். உங்களுக்கு நல்லவற்றை மட்டுமே தனியாகப் பிரித்து தந்தால் மட்டுமே சாபிடுவேன் என்ற சோம்பேறிக்குழந்தையின் மனம்.. என்று தோன்றுகிறது. கொஞ்சம் கொட்டைகளை அகற்றிவுட்டுத்தான் சாப்பிட்டுப் பாருங்களேன். ரோஜா வை மாலையில் மட்டுமே பார்த்திருப்பீர்கள் போல... அது செத்த ரோசா.. உயிருடன் பாருங்கள்... அதனுடன் ஆயிரம் முட்கள்!
ReplyDeleteஅன்புடன்..
ஓசை செல்லா
வாசகர்களின் ரசனை என்றெல்லாம் திட்டவேண்டாம்.. உங்கள் பதிவைக் கூட படித்திருக்கிறார்களே.. இதுவே அவர்களின் தாராள மனத்தின் சான்று! தொடர்ந்து எழுதுங்கள்
நம் எண்ணங்கள் நமக்கு பிறரின் எண்ணங்கள் பிறருக்கு! அனைத்து தரப்பினரும் எங்கும் இருக்கத்தானே செய்வர். நமக்கு பிடித்ததை நாம் செய்வோம். அவர்களை நமை நெருங்க விட வேண்டாம். வாருங்கள் கவிஞரே நமக்கான பாதையில் நாம் பயணிப்போம். நமை யாரும் நிறுத்தமுடியாது நிறுத்தவும் கூடாது :)
ReplyDelete//டாய்லெட்டினுள் அல்லவா போய்விட்டுகிறோம்//
ReplyDelete:)
அன்பின் நித்யா!
ReplyDeleteஇங்கே வலைப்பதியும் பதிவர்கள் யாரும் எழுத்தாளர்கள் அல்ல. ஒரு சிலர் மட்டும் எழுத்தாளர்களை விட சிறப்பாக எழுதுகிறார்கள்.
பதியப்படும் எல்லாப் பதிவுகளையும் நீங்கள் படிக்கிறீர்கள் என்பதே எனக்கு அதிர்ச்சியை தருகிறது. என்னைப் பொறுத்தவரை ஆழமான வாசிப்புக்கு சில பதிவுகள், ஜாலியான வாசிப்புக்கு சில பதிவுகள், கும்மியடிக்க சில பதிவுகள் என்று தரம் பிரித்து வாசிக்கிறேன்.
மற்றபடி சூடான இடுகை, பின்னூட்டம் போன்ற அரசியலுக்குள் ஆர்வம் செலுத்துவீர்களேயானால் தாவூ தீர்ந்து, டவுசர் கிழிந்துவிடும் என்று எச்சரிக்கிறேன்.
திரட்டிகளில் இணையாத பல பதிவுகள் அருமையாக இருக்கிறது. தேடிப்பிடித்து வாசியுங்கள். அவ்வப்போது பதியுங்கள். நன்றி!
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று..
ReplyDeleteஓசை செல்லா, லக்கிலுக், சதீஷ், பாசமலர்...
ReplyDeleteஉங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ஓசை செல்லா, லக்கிலுக் போன்ற மூத்தபதிவர்களின் வருகைக்கும் அவர்களின் வார்த்தைக்கும் நான் வணங்கி என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சூடான இடுகை இடும் நேரத்தில் இப்படியொரு பின்னூட்டம் இட்டு, தங்கள் வார்த்தைகளைச் சொல்லிவிட்டுப்போவோம் என்று வந்த உங்களுக்கு என் நன்றி...
என் சிந்தனையைச் செதுக்கும் விதமான கூடுதல் சிந்தனைகளைத் தந்து விட்டுப் போயிருக்கிறீர்கள்.
லக்கி அவர்களின் எச்சரிப்பை நான் சீரியஸாகவே எடுத்துக்கொள்கிறேன். ஓசை செல்லாவின் வார்த்தைகள் வாசிக்கையில் சற்று கடுமையாக இருப்பினும் அவற்றில் நேர்மையும் உண்மையும் இருப்பதால் அந்த வார்த்தைகளையும் நான் மதித்து ஏற்றுக்கொள்கிறேன்.
இப்படியொரு ஆதரவான, அனுசரனையான, தேவையான கருத்துக்களெல்லாம் என்னைத்தேடிவரும் என்று நான் நிச்சயமாக நினைக்கவில்லை. தார்மீக பொறுப்பெடுத்துக்கொண்டு எனக்காக தங்கள் நேரம் ஒதுக்கி எழுதிய உங்களுக்கு இருகை கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.
தொடர்ந்து எழுதுகிறேன், நல்ல விஷயங்களை தேடி வாசிக்கிறேன்.
மிக்க நன்றி
பேரன்புடன் நித்யகுமாரன்.
//ஒரு சூடான இடுகை இடும் நேரத்தில் இப்படியொரு பின்னூட்டம் இட்டு, தங்கள் வார்த்தைகளைச் சொல்லிவிட்டுப்போவோம் என்று வந்த உங்களுக்கு என் நன்றி...
ReplyDelete//
கவலைப்படாதீர்கள் நண்பா. சூடான இடுகைகளில் உங்கள் பதிவுகள் இனிவர சரியான அச்சாரத்தையே இந்த பதிவு மூலம் இட்டிருக்கிறீர்கள்.
//
ReplyDeleteகவலைப்படாதீர்கள் நண்பா. சூடான இடுகைகளில் உங்கள் பதிவுகள் இனிவர சரியான அச்சாரத்தையே இந்த பதிவு மூலம் இட்டிருக்கிறீர்கள்.
//
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் என்பது இதுதானா...
கலக்கிட்டாப் போச்சு லக்கி...
பல விதமான பதிவுகள் வந்துக்கொண்டிருந்தாலும் கூட நல்ல பதிவுகளும் தொடர்ந்து வந்துக்கொண்டுத்தான் இருக்கின்றன.திறமையான பலர் தொடர்ந்து தங்களுக்கு பின்னூட்டமே வரவில்லையென்றாலும் கூட எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்ற குறள் பிரகாரம் நடப்பதே சரியானது.
ReplyDelete//
ReplyDeleteதிறமையான பலர் தொடர்ந்து தங்களுக்கு பின்னூட்டமே வரவில்லையென்றாலும் கூட எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
//
மஞ்சூர் ராசா, அந்த மனநிலை வர இறையை வேண்டுகிறேன்
நண்பர் நித்யா,
ReplyDeleteஉங்களின் முதல் ஒன்றிரண்டு பதிவை படித்த பொழுதே நமக்கான ரசனையில் இன்னொரு நண்பர் வந்திருக்கிறார் என்று மகிழ்ந்திருந்த நேரத்தில் உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவு.
நல்ல பதிவுகள் தரும் நிறைய பதிவர்கள் தமிழ்மணத்தில் இயங்குகிறார்கள்,அவர்களின் படைப்புகள் இன்னும் உங்கள் பார்வைக்கு வரவில்லையென்றே நினைக்கிறேன்.
எல்லோரும் ஒத்த கருத்துடையவர்கள் இல்லை என்பது உங்களுக்கே நன்கு தெரியும்,இருப்பினும் நம்மையொத்த கருத்துடையவர்கள்,ரசனையுடையவர்களை நீங்கள் தமிழ்மணத்தில் கண்டுகொள்ளலாம். இன்னும் கொஞ்ச நாளில் உங்களுக்கே தெரிந்துவிடும்.
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.
நாடோடி இலக்கியன்...
ReplyDeleteஉங்களின் மடல் கண்டு மகிழ்கிறேன். கனிவான வார்த்தைகளில் நம்பிக்கையும் ஆர்வமும் உண்மையும் பேசும் உங்கள் வார்த்தைகள் என்னை மிகவும் வலுவூட்டுகின்றன.
மிக்க நன்றி
பேரன்புடன்
நித்யகுமாரன்
நண்பரே,ஆரோக்கிய சமூகத்திற்கான அளவு கோல்கள் பதிவுலகில் இல்லை என்பதை நான் புரிந்திருக்கிறேன்.
ReplyDeleteபதிவுலகின் பல குழுக்களில்-திராவிடம்,பிராமணர்,கம்யூன்,இன்னும் மற்றபிற என பலர் இருக்கிறார்கள்.
சமூகம் என்பதற்கு அவரவர் பார்வையில் ஒரு defenition இருக்கிறது.பொதுநன்மையைக் கருதும் கூட்டம் சொற்பமாகவும் குழுவில்லாமலும் இருக்கிறது.
அவர்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன
ஒன்று-அவர்களெல்லாம் ஒரு குழுவாவது !
இரண்டு - விரும்பியதை- நேர்பட எழுதிவிட்டு வேடிக்கை பார்ப்பது.
// இனிய உளவாக இன்னாதகூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று..!
ReplyDeleteவாசிப்பிற்கும் இது பொருந்தும் நித்யன்... :) //
கவிதாயினி சொன்னதுக்கு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேய் !!!
அன்பர் அறிவன்...
ReplyDeleteஉங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. இந்த குழுக்களின் அரசியல் தெரியாமல், பஞ்சு மிட்டாய் பார்த்து ஆசைப்பட்டுப்போகும் குழந்தையின் மனத்தன்மையோடு உள்ளே சென்றுவிட்டேன். பின்னர் சட்டெனத் தெரிகையில் மனம் ஒப்ப மறுக்கிறது.
இந்த தெளிவு முன்பேயிருந்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காது. ஆயினும் இந்த அனுபவமும் தேவையானதாகவேயிருக்கிறது.
நீங்கள் சொன்ன இரண்டு வழிகளில் இரண்டாம் வழிதான் சரியெனப்படுகிறது. முதல் வழி நம்முடைய அடிப்படை குணத்தை காலப்போக்கில் மாற்றிவிடும் சாத்தியக்கூறுகளை அதிகம் கொண்டது. நான் இரண்டாம் வழியினையே தேர்ந்தெடுக்க விழைகிறேன்.
உங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
பேரன்புடன் நித்யகுமாரன்
ரிப்பீட் அடித்து தன் கருத்தை பதிவு செய்த பொன்வண்டுக்கு நன்றி
ReplyDeleteஅன்பு நித்யகுமாரன்
அன்புள்ள நித்ய குமாரனுக்கு,
ReplyDeleteஎனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...உங்கள் பதிவின் ஒவ்வொரு வார்த்தையும் என் மனதின் ப்ரதிபலிப்பு போல இருக்கிறது...இதைக் கூட பதிவாக எழுத பயந்து கொண்டு இருந்தேன்.உங்கள் பதிவையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படித்த பின்பு கொஞ்சம் தெளிவும் பிறந்தது போல இருக்கிறது.ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது யாரோ ஒருவர் நம்மைப் போலவே சிந்திப்பதை எண்ணும் போது! இதயம் நிறைந்த நன்றி!!!
அன்புடன் அருணா
அன்பு நிறை அருணாவிற்கு...
ReplyDeleteஉங்களின் கருத்துக்களை பதிந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். நீங்களும் இதே போன்ற சிந்தனையோடுதான் இருந்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
நாம் நமது கடமையாற்றிச் செல்வோம். நல்லனவற்றை காலம் குறித்துவைத்துக் கொள்ளும். அல்லனவற்றை காலம் அவ்வப்போது கொல்லும்.
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
பேரன்பு நித்யகுமாரன்
Niddh...paartheerkala...
ReplyDeleteethanai anparkal...
nintuthaan paarpomae
அருணா,நித்யகுமாரன்,அறிவன்..
ReplyDeleteநான் சொல்லும் குழுவுக்கு ஆட்கள் ரெடி !
Dear Nityakumaran, Venduvadhai eduthukondu vendadhavarrai thookki pottu vidungal. Ellavarraiyum padipadhey(adthu edhir karuthu, adhirchi thagaval eduvaginum) sari!!! Idhu judgemenat ellai, but neengal thodarndhu ezhuthavendum engira akkarai, ungalin sila kavidhaigal migavum pidithulladhu.
ReplyDelete