உனக்கான வார்த்தைகளை
சேர்த்து வைத்து சேர்த்து வைத்து
சுமக்க முடியாமல் தடுமாறுகிறேன்...
உனக்கான முத்தங்களையெல்லாம்
எப்படி சேகரம் செய்வதென்று
புரியாமல் தடுமாறுகிறேன்...
வார்த்தைகள்
தாமதமாய் வந்தாலும்
அதன் தரம் மறையாது...
ஆனால்
முத்தங்கள் அப்படியா...
ஈரம் காய்வதற்குள்
வாங்கிக்கொள்ள வேண்டாமா...
எத்தனை முறைதான்
ஈரப்படுத்தித் தயார்நிலையில்
வைத்திருப்பதென் உதடுகளை...
உதடுகளும் முத்தங்களும்
மாறி மாறி கேலி செய்கின்றன...
இனி மொத்த காலமும் முத்தக்காலமே...
விரைந்து வா அன்பே...
முத்த சேகரிப்பு குறும்பு..
ReplyDeleteரசித்தேன் வரிகளை!!!
seekiram mutham kidaikka valthukkal :)
ReplyDeleteஇரசிகா & dreams...
ReplyDeleteஉங்கள் வாசிப்புக்கும், நேசிப்புக்கும் மிக்க நன்றி...
முத்தத்தை எப்படி சேகரித்து வைத்துக்கொள்வது? எனக்கு பல நாட்டு பணம், காயின்ஸ் சேகரிக்கும் பழக்கம் உண்டு அது போல.............
ReplyDeleteச்சே முத்தத்தை எப்படி சேகரிப்பது என்று கேட்கவந்தேன் தப்பா நினைக்காதீங்க:)))
:)
ReplyDeleteஎத்தனை முறைதான்
ReplyDeleteஈரப்படுத்தித் தயார்நிலையில்
வைத்திருப்பதென் உதடுகளை...
enna ippadi varunthukireerkal
paaka azhagagathanae irukireerkal
aala illai eeeram kaayum mun peruvatharkku
kodukka neengathaan thayaraga villai