தமிழ் சினிமாவில் அத்திப்பூ பூத்திருக்கிறது.
மிஷ்கினின் நந்தலாலா அற்புதமான திரைப்படமாக வந்திருக்கிறது. சித்திரம் பேசுதடி மற்றும் அஞ்சாதே இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.அஞ்சாதேயின் திரைக்கதையும் கதாபாத்திரங்களும் இன்னும் மனதை விட்டு நீங்காமலிருக்கின்றன.
பாஸ்கர் மணி (மிஷ்கின்), அகில்(அஸ்வத் ராம்) – இருவரும் முக்கிய கதாபாத்திரங்கள். பள்ளியில் படிக்கும் அகில் சிறு வயதிலேயே தன்னை விட்டுச்சென்ற தன் அம்மாவைத் தேட பள்ளி சுற்றுலாவை கட் அடித்துவிட்டு பயணிக்கிறான். சிறுவயதிலேயே மனநல மருத்துவமனையில் தன்னை விட்டுவிட்ட தன் தாயை வெறுத்து நொந்துபோன பாஸ்கர் மருத்துவமனையிலிருந்து தப்பித்து வெளியே வருகிறான். இருவரும் சந்திக்கிறார்கள். சந்தர்ப்பங்கள் அவர்களை இணைத்து ஒரு நேர்கோட்டில் பயணிக்க வைக்கின்றன. அம்மாவைத் தேடும் இரண்டு பேர் தங்கள் பயணத்தில் சந்தித்த விஷயங்கள் என்ன? இறுதியல் தத்தம் அன்னையரை கண்டு கொண்டார்களா? என்பனவற்றை தயவுசெய்து தியேட்டரில் பாருங்கள். இந்த படம் வெற்றி அடைந்தால்தான் நல்ல படங்கள் செய்ய இயக்குநர்கள் முன்வருவார்கள். தமிழ் சினிமாவை நேசிப்பவர்கள் இந்த படத்தை கட்டாயம் நேசிப்பார்கள்.
அகிலாக வரும் அஸ்வத்ராம் இன்னொரு ஆச்சரியம். குழந்தை நட்சத்திரம் குழந்தையாகவே நடித்திருப்பது இன்னொரு சிறப்பு. ஸ்கூல் யூனிபார்மோடு, ஷூ சாக்ஸ், பாடப்புத்தக மூட்டை, வாட்டர் பாட்டில் சகிதம் – படம் முழுக்க தன் அப்பாவி முகத்தோடு, தன் குடும்பத்தின் மேக்ஸி சைஸ் கலர் போட்டோவுடன் தன் அம்மாவைத் தேடி அலைகிறான். ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பு. நந்தலாலா நல்ல தொடக்கம். அஸ்வத் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
Naanum padam parthen nichayam thooki thalaiyil vaithu kondadavendiya padaipputhaan
ReplyDeletemarai usa,vrey niceee
ReplyDeleteயோவ் வாரம் ஒன்னாவது எழுதுயா...
ReplyDelete//ஒரு சூழ்நிலை விபசாரியாக (எல்லாருமே அப்படித்தானோ) வரும் ஸ்நிக்தாவும் கவர்கிறார். பொசுக்கென்று ஆடை அவிழ்க்கும் அவள், ஒரு ஆணின் பேண்ட்டை கீழே விழா வண்ணம் இறுகக்கட்டும் அந்த மழைக் காட்சி ஓர் அழகான முரண்.//
நல்ல அப்சர்வேஷன் செந்தில்..நன்றி
விமர்சனம் விமர்சனமாக எழுத பட்டதை நான் வாழ்த்துகிறேன், சிலர் முடிவுகளையும் விமர்சனத்தில் சேர்த்து விடுவதால் அப்படத்தை போய் பார்ப்பதில் எந்த வித thrill லும் இல்லாமல் போய் விடும்.
ReplyDeleteஉங்கள் நயமான எழுத்து அருமை நண்பரே, மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
Please read this.
ReplyDeletehttp://narumugai.com/?p=19257
http://en.wikipedia.org/wiki/Kikujiro
http://www.heyuguys.co.uk/2010/01/31/must-see-movies-kikujiro/
///
ReplyDeleteஐத்ருஸ் said...
Naanum padam parthen nichayam thooki thalaiyil vaithu kondadavendiya padaipputhaan
///
நன்றி நண்பரே... கொண்டாடுவோம்
///
ReplyDeleteமணிஜீ...... said...
யோவ் வாரம் ஒன்னாவது எழுதுயா...
///
முயற்சிக்கிறேன் மணிஜீ
//ஒரு சூழ்நிலை விபசாரியாக (எல்லாருமே அப்படித்தானோ) வரும் ஸ்நிக்தாவும் கவர்கிறார். பொசுக்கென்று ஆடை அவிழ்க்கும் அவள், ஒரு ஆணின் பேண்ட்டை கீழே விழா வண்ணம் இறுகக்கட்டும் அந்த மழைக் காட்சி ஓர் அழகான முரண்.//
நல்ல அப்சர்வேஷன் செந்தில்..நன்றி
///
தோணுச்சு சாரே...
அன்பு நித்யன்
///
ReplyDeleteதொட்டிஜெயா said...
விமர்சனம் விமர்சனமாக எழுத பட்டதை நான் வாழ்த்துகிறேன், சிலர் முடிவுகளையும் விமர்சனத்தில் சேர்த்து விடுவதால் அப்படத்தை போய் பார்ப்பதில் எந்த வித thrill லும் இல்லாமல் போய் விடும்.
உங்கள் நயமான எழுத்து அருமை நண்பரே, மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
///
நன்றி நண்பரே...
அன்பு நித்யன்
ரசனையான விமர்சனம் நண்பரே.. வாழ்த்துக்கள் :)
ReplyDeleteThis comment has been removed by the author.

ReplyDelete